தூத்துக்குடி லீக்ஸ் 10-10-2023
photo news
arunan journalist
ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் நாளை முதல் பேருந்து கள் உள்ளே செல்லும் இயக்கப்படும் என அறிவித்தனர்
பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இதுபற்றி செய்தியாவது
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் கடந்த 2019 ல் இடிக்கப்பட்டு சீர்மிகு திட்டம் ஆக ரூபாய் 58.கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் மிக சிறப்பாக தூத்துக்குடி பொதுமக்கள் அதிசயத்தக்க விதத்தில் 4 அடுக்கு ஃப்ளோர் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.
கனிமொழி எம்பி - அமைச்சர் கே என் நேரு திறப்பு |
இருநாட்களுக்கு முன் 8-10-2023 அன்று காலை 12 மணி அளவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பேருந்து நிலையத்தில் அடிக்கல்லை திறந்து வைத்திட மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பேருந்து நிலையம் வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீடீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
தூத்துக்குடி மாவட்ட அமைச்சர்கள் -கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மார்கண்டேயன் எம்எல் ஏ மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாகராட்சி ஆனையர் தினேஷ்குமார் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆயினும்...அன்று
ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ்கள் உள்ளே வந்து செல்ல இயங்கபட வில்லை
மின் இணைப்பு வயர் பொருத்துதல், குடிநீர் இனைப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் சில பணிகள் பாக்கி முழுமையடையாமல் இருந்தாக கூறினார்கள் மேலும் வியாபாரம் கடைகள் திறக்கப்படவில்லை
ஆகவே இன்று10-10-2023 காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் செந்தில் ராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் ஆகியோர் பஸ் நிலைய பகுதியில் ஆய்வு செய்ய வந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது
11-10-2023 அனறு முதல் ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி மாநகராட்சி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் இயக்கப்படுகின்றன திருநெல்வேலி திருச்செந்தூர் பஸ்கள் உள்ளே வந்து செல்லும் முவரும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்து கொண்டார்கள்
பயணிகள் மத்தியில் ரொம்ப மகிழ்ச்சி
தூத்துக்குடி இருந்து வெளியூர் சென்று வரும் பேருந்து நிலையத்தில் நாளை ஹேப்பி மோடூல சுற்ற வர போகிறார்கள்
பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் பஸ் நிலையம் பூராவும் சுற்றி சுற்றி வருவார்கள்
குடிநீர் ஆண் பெண் கழிவறைகள் இலவசம் ஆங்காங்கே பச்சை பசேல் ஃபுல் வெளிகள் அகண்ட விஸ்தாரமான காற்றோட்டம் முக்கிய மாக செல்ஃபி பாயிண்ட் உட்பட
சிறுகுழந்தைகள் இளைஞர் கள் மகளிர் கள் கவரும் வண்ணம் இருப்பதால்
தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .
தூத்துக்குடி லீக்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக