Tamil Nadu updates,
# பாஜக தலைவர் அண்ணாமலையின் புதிய போராட்ட அறிவிப்பு இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
சென்னை, டிச. 26 -
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியை கண்டித்து புதிய போராட்டத்தை அறிவித்துள்ளார்.
செருப்பு அணியாமல் இருப்பேன்!!!
சாட்டையால் அடித்து போராட்டம்!!!
திமுக ஆட்சி முடியும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றும், தனது வீட்டு முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
48நாட்கள் விரதம்!!!
மேலும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் பாஜக சார்பில் மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், தமிழக மக்களின் நலனுக்காக 48 நாட்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்...
, "பல்கலைக்கழக வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளதும் கவலையளிக்கிறது. அமைதி வழியில் போராடியவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அந்த காவல்துறையினரை பல்கலைக்கழக பாதுகாப்பிற்கு பயன்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது" என குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக