வியாழன், 26 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு கோரி அஇஅதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates 

 Photo news by Arunan journalist 

பெண்கள் பாதுகாப்பு கோரி தூத்துக்குடி யில் அஇஅதிமுக நாளை ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, 2024டிச. 26 -

நாளை அதிமுக 27-12-2024

ஆர்ப்பாட்டம் 

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதையும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தையும் கண்டித்து, அஇஅதிமுக சார்பில் நாளை (27.12.2024) தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.



எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி 12-வது வாசல் மையவாடி முன்பாக  உள்ள எம்.ஜி.ஆர் திடலில் காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 


முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெறும் 

தொண்டர்கள்!!!

இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும் நடைபெறும் 

பெண்கள்!!!

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக