தருவைக்குளத்தில் அதானி அறக்கட்டளை சார்பில் கபாடி போட்டி
---------------------------------------------------
தருவைக்குளம், டிச. 27 -
அதானி பவுண்டேசனின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் சார்பில் கபாடி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
தருவைக்குளம் அன்னை வேளாங்கன்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகள் காலை முதல் இரவு வரை நீடித்தன. போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தருவைக்குளம் மற்றும் வெள்ளப்பட்டி கபாடி அணிகள் மோதின.
ரஜினிகாந்த் மன்ற ஆலோசகர் அந்தோணி பிச்சையா, தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற அமைப்பாளர் லாரன்ஸ் மற்றும் தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் லெனின் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
பல்வேறு அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் தருவைக்குளம் கபாடி அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்:
முதல் பரிசு: ரூ.15,000
இரண்டாம் பரிசு: ரூ.10,000
மூன்றாம் & நான்காம் பரிசு: தலா ரூ.5,000
ஐந்தாம் முதல் எட்டாம் பரிசு: தலா ரூ.3,000
வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக