Tamil Nadu updates,
photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழாவில் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழா விமர்சையாக நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில், தென் மண்டல பொறுப்பாளர் சஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ்.டி.ஆர். சாமுவேல், உஷா அன்னை பெஸி, சுகந்தி, இக்னேஷியஸ், கண்ணன், கிறிஸ்து ராஜா, ராஜா, டெனி, கிரி, பாபு, அபர்ணா, கௌசல்யா, மணிராஜ், கிஷாந்த், கெமில்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக