தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பீச் ரோடு சார் ஆட்சியர் அலுவலகத்தின் வடபுறம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலைக்கு போராடிய வ.உ.சி, வாஞ்சிநாதன், சுப்பிரமணியசிவா உள்ளிட்ட இந்திய சுதந்திர போராட்ட வீர்களுக்கு எதிராக செயல்பட்ட ஆஷ் மணிமண்டபம் மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்படுவதை நிறுத்த கோரி இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில்,
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா
மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் ,மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன் ஆகியோர் முன்னிலையில்
இந்து முன்னணியினர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் பாதை யாத்திரையாக சென்று மனு கொடுக்க செல்ல முயன்றனர். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து போலீசாரால் வேனில் ஏற்றப்பட்டு மாநகராட்சி அலுவலகம் சென்று மாநகராட்சி ஆணையாளர் சாரு ஸ்ரீ சந்தித்து மனு அளித்தனர்
இதில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து மாவட்ட செயலாளர் ராகவேந்திரா,சிவலிங்கம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம்,சரவணகுமார்,மாரியப்பன்,நாராயண ராஜ், ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன்,ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிபு,,சுடலை செல்வம், ராஜா, செல்வம் ,மேற்கு மண்டல பொறுப்பாளர் சுடலை,கவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் நெல்லை சுடலை, விமல், சுரேஷ், சங்கர்,சேவாபாரதி மாநிலச் செயலாளர் வெண்ணிமலை,பிராமண சங்கம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக