அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார் அதன் பின்னர் சங்கராமேஸ்வர் கோவிலில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
![]() |
இது பற்றிய செய்தியாவது:-
ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து - அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருந்தார்.
கடந்த 25 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு.
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு.
அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் அறிவிப்பு.
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் பழனிச்சாமி எதிராக வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு செல்லாது என உத்தரவிட்டதை தொடர்ந்து அதனைக் கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு இதனை கொண்டாடும் விதமாக அதிமுக திரண்டு வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார் .
இந்த நிகழ்ச்சி யில் அமைப்பு செயலாளர் ஓட்டுனர் அணி பெருமாள் சாமி.மாநில எம்ஜிஆர் மற்ற இனைசெயலாளர் டாக்டர் ராஜசேகர் மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திருபாற்கடல் துனைசெயலாளர் செரீனா மாவட்ட எம்ஜிஆர் மாவட்ட இனைசெயலார் சத்யா இலெட்சுமணன் சார்பு அணி நிர்வாகி யூ எஸ் சேகர் அருண் ஜெயக்குமார் விக்கி தனம் டாக்ராஜா பிரபு முனியசாமி கோமதி மணிகண்டன் முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி முன்னாள் சேர்மன் இரா ஹென்றி மாமன்ற உறுப்பினர் வெற்றி செல்வன் மந்திரமூர்த்தி பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் நட்டார் முத்து பொன்ராஜ் மற்றும் கே ஏ சி ராதா ஜெயக்குமார் அய்யாதுரை தீப்பொறி முருகேசன் இலக்கிய அணி நடராஜன் ஜாக்சன் தேவராஜ் முத்துமதி அரசு போக்குவரத்து தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்விகுமார் தூத்துக்குடி மண்டல துணை தலைவர் பார்வதி பொன்சிங் தொப்பை கணபதி இனைசெயலாளர அமைப்பு செயலாளர் ஓட்டுநர் துணை செயலாளர் சி பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழகம் முழுவதும் அதிமுக வினர் இந்த தீர்ப்பு வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக