முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட
விசாரணை ஆணையத்தின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆறுமுகசாமிவிசாரணை ஆணையத்தின்
அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
அறிக்கை அதிமுவில் தொண்டர்களிடம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
இதனால் அதிமுக கட்சி வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதில் சசிகலா ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தோன்றியுள்ளது.
இந்த அறிக்கை வருகின்ற 29.08.2022 அன்று நடைபெறும்
அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting)உரிய நடவடிக்கை மேற்கொள்ள போவதாக - முதலமைச்சர் ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் இன்று
(27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ
ஜெயலலிதா அவரின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட
விசாரணை
ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற
நீதியரசர் ஏ.ஆறுமுகசாமி சந்தித்து விசாரணை ஆணையத்தின்
அறிக்கையை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள்
முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து
விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் . ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற
நிலையில், இன்று (27.08.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆறுமுகசாமி ள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.
இந்த அறிக்கையை 29.08.2022 அன்று நடைபெற இருக்கின்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு
உரிய நடவடிக்கை மேற்கொள்ள - மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்நிகழ்வின்போது,
சட்டதுறைஅமைச்சர்
எஸ்.இரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக