வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பெரியாரிய உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பில் குஜராத் வீரமங்கை மல்கீஸ் பானுவிற்காக நீதி கேட்கும் போராட்டம் ..

 பெரியாரிய உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பில் குஜராத் வீரமங்கை மல்கீஸ் பானுவிற்காக நீதி கேட்கும் போராட்டம் .. தூத்துக்குடியில் நடைபெற்றது .



இதுபற்றிய செய்தியாவது -

கடந்த 2002 ல்  குஜராத் மோடி முதல்வராக இருந்த போது  இனக்கலவரத்தில் 21 வயதே ஆன மல்கீஸ் பானு என்ற  5 மாத கர்ப்பிணி  பெண் தனது 3 வயது பெண் குழந்தையையும் இழந்து , தனது குடும்பத்தை சார்ந்த உறவினர்கள்  14  பேரையும் பறிகொடுத்தார்.



 அத்துடன் 11 பேர் கொண்ட கும்பல் கற்பழிக்கப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாகப்பட்டு , இறுதியில் உச்சநீதிமன்றத்தின் மூலம் 11 பயங்கரவாதிகளுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்தார்.


அந்த ஆயுள் தண்டனையை தற்போது உள்ள குஜராத் அரசு நன்னடத்தை என்ற பெயரில் விடுதலை செய்துள்ளது.


இந்த விஷயத்தில் சகோதரி மல்கீஸ் பானுவிற்கு மட்டுமல்ல நாடே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இந்த விடுதலையை கண்டித்தும் , 

மீண்டும் இந்த விடுதலையை திரும்ப பெற வழியுறுத்தியும் ,  

சகோதரி மல்கீஸ் பானுவிற்கு நீதி கிடைக்கவும் , இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் தூத்துக்குடி 

VVD சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக 24-8-2022அன்று மாலை 5.00 மணிக்கு மழைத்தூரல்களுக்கு மத்தியிலும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

அ இ காங்கிரஸ் கட்சி 

திராவிடர் விடுதலைக் கழகம்

தமுமுக , மனித நேய மக்கள் கட்சி

தமிழ்ப் புலிகள் கட்சி

SDPI கட்சி , PFI 

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

புரட்சிகர இளைஞர் முன்னணி

ஆதித் தமிழர் பேரவை 

திராவிடர் தமிழர் கட்சி 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

ஏகத்துவ முஸ்லீம் ஜமாத்

கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் 

தமிழர் கழகம் கட்சி 

தமிழர் விடியல் கட்சி 


போன்ற கட்சிகள் இயக்கங்களின் பொறுப்பாளர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக