சனி, 3 செப்டம்பர், 2022

பூப்பந்தாட்டப் போட்டியில் தூத்துக்குடி. ஹோலிக்கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்ற னர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் S.A.V. பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் பூப்பந்தாட்டப் சோனல் போட்டிகள்  ( Zonal ) நடைபெற்றது 

இதில் தூத்துக்குடி ஹோலிக்கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சூப்பர் சீனியர், சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் முதலிடத்தை பெற்றுள்ளனர்



. ஜூனியர் அணியை அபிகேல் என்ற மாணவியும் சீனியர் அணியை ஸ்னோஸ்டேரி என்ற மாணவியும் சூப்பர் சீனியர் அணியை மாளவிகா என்ற மாணவி  தலைமையில் ஆடி வெற்றி பெற்றார்கள். 


ஜூனியர் பிரிவில் அபிகேல், கோன்ஸ்ஸா , அக்ஷ்சனா, இனியா, டக்ஸ்டிரா ஆகியோரும் சீனியர் பிரிவில் ஸ்னோஸ்டேரி, அட்ரினா, எலைஜா, டிவைனா, ஹேன்சா ஆகியோரும் சூப்பர் சீனியர் பிரிவில் மாளவிகா, எட்லின், ரோலினா, நிரன்ஜனா மற்றும் அபிஷா ஆகியோரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற்ற னர். 



ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வியின் ஆசிரியை சோபியா மற்றும் மாணவிகளின் பயிற்சியாளர் பாலசிங் பூ பந்தாட்ட த்தில் விளையாடிய மாணவிகளை வெகுவாகப் பாராட்டினார்கள். 

இதற்கு பிறகு மாணவிகள் டிவிஷனலில் விளையாட உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக