வியாழன், 23 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்த நாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெ திருவுருவ படத்திற்கு மலர்தூவி இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர்

முன்னாள் தமிழக முதல்வர் புட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா  75 ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி யில் அதிமுக இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர்.



இதுபற்றிய செய்தியாவது -:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று (24.02.2023) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்  அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி டுவிபுரம் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகம் முன்பு  புரட்சித்தலைவி ஜெயலலிதா  திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.



அதில் மாலை அணிவித்து மலர் தூவினர் பின்பு  அதிமுகவினர் அப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு பிறந்த நாள் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர மாநகரப் பகுதி பேரூராட்சி மாநகர வட்டக் கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக