வியாழன், 23 பிப்ரவரி, 2023

செல்போனில் தேவையற்ற spam call (ஸ்பேம் கால்) வராமல் தடுப்பது எப்படி?! விளக்கம்!!!!

 thoothukudileaks 23-2-2023

நம்நாட்டில் கைபேசி  இல்லாத மனிதன் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது .

தற்போது செல்போனில் விளம்பரங்கள் கடன் வசதி குற்ற செயல் புரியும் ஹேங்கர் இவர் கள் முலம் தேவையற்ற போன் அழைப்புகள் - வருகிறது ஏன்?  சிம் கார்டு நிறுவன டீலர் ரிக்கார்டிங் வாய்ஸ் கால்  கூட அடிக்கடி தீரா தொல்லை தரும் கால்கள் வருகின்றனர்.

இப்படி  நாம் கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை தடுக்கலாம்.    




நாம் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நமக்கு ஒரு புதிய நம்பரிலிருந்து அழைப்பு வரும். நாமும் ஏதோ முக்கியமான போன் கால் என நினைத்து அவசரமாக போனை எடுப்போம். 



ஆனால் அது ஸ்பேம் கால் அல்லது கஸ்டமர் கேர் கால் அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடும் எண்களில் இருந்து வரும் போன் அழைப்புகளாக இருக்கும்.

 இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இப்படியான ஸ்பேம் அழைப்புகள் வராமல் தடுக்கலாம்.

அதற்கு செல்போன் ல  கீழ்க்கண்ட படி செய்யுங்கள்.


 நீங்கள் ஆன்ராய்டு அல்லது ஐபோன் பயன்படுத்துபவரா.? 

இந்த ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களையும் , உங்கள் தொலைபேசி அழைப்புகளையும் தற்காத்து கொள்ளலாம்.

 ஆன்ராய்டு செல்போன் பயனாளர்கள்:


கைபேசி பயன்படுத்துவோரில்  ஆன்ராய்டு செல்போன் பயனாளர்கள்தான் அதிகம். ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டுக்கள் அதிகமாக ஆன்ராய்டு பயனாளர்களை குறிவைத்தே நடைபெறுகிறது. எனவே தேவையற்ற அழைப்புகளை நிறுத்தவோ, முடக்கவோ பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு பயன் தரும்.


முதலில் பிளே ஸ்டோரில் கூகுள் டயலரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சில ஆன்ராய்டு போன்களில் கூகுள் டயலர் நிரந்தரமாகவே இருக்கும். அப்படி இல்லையெனில் கூகுள் டயலரை டவுன்லோட் செய்யவும். அதன் பின்னர் கூகுள் டயலரில் வலது மேல் ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தினால் செட்டிங்கிற்கு செல்லும். செட்டிங்கில் Caller ID and Spam என்ற தேர்வு இருக்கும். அதனுள் சென்றால் Filter Spam Calls என்பதனை அழுத்தினால் உங்களுக்கு வரும் தேவையற்ற , சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை உடனே முடக்கலாம்.


 ஒரு வேளை நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் கைபேசியை பயன்படுத்துவோராக இருந்தால் ஸ்பேம் கால்களை முடக்குவது மிக சுலபம். உங்கள் சாம்சங் டயலரில் உள்ள செட்டிங்கிற்கு சென்றாலே ஸ்பேம் அழைப்புகளை முடக்கும் (Block Spam and Spam Calls) எனும் தேர்வு இருக்கும் அதன் உபயோகித்து ஸ்பேம் அழைப்புகள் உங்களுக்கு வராமல் துண்டித்து கொள்ளலாம்.


ஐபோன் பயனாளர்கள் 

போனில் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு முதலில் ட்ரூ காலர் எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

அதன் பின்னர் உங்கள் எண் மற்றும் இமெயில் முகவரி மற்றும் அதில் கேட்கும் விபரங்களை நிரப்பிய பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கிற்கு செல்ல வேண்டும்.


பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கில் உள்ள போன் செட்டிங் விபரங்களுக்குள் செல்ல வேண்டும். அதில் அழைப்புகளை முடக்குவதற்கான (Call Blocking) செட்டிங்ஸ் இருக்கும். அதனுள் சென்றால் நான்கு விதமான விருப்பங்களை காண்பிக்கும். அவை அனைத்தையும் ஆன் செய்தால் உங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் இனி வரவே வராது.

எனவே சைபர் திருட்டுக்கள் தொடர்பான அழைப்புகள் உங்கள் கைப்பேசியில் வராமல் தற்காத்துக் கொள்ளுங்கள். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக