செல்போன் டிரிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்போன் டிரிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 செப்டம்பர், 2025

ஏ...ஹே.பயமா அதுவும் எனக்கா? துணிந்த சுந்தர் பிச்சை ? உலக பொருளாதார மாநாட்டில் பரபரப்பு

 Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்

“நான் மனித குலத்திற்கே சேவை செய்கிறேன்..”
டிரம்பின் மிரட்டலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை!

ஜெனீவா:
உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை அவமதிக்கும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

thoothukudileaks


ஆனால் அதற்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அளித்த பதில், சர்வதேச அளவில் விவாதத்தையும் பாராட்டையும் கிளப்பியுள்ளது.

மாநாட்டின் போது, டிரம்ப், ...

“இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பெருமை பேசுகிறது. ஆனால் அமெரிக்கா இல்லாமல் அந்த முன்னேற்றம் சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினார். 


இதற்கு சுந்தர் பிச்சை, 

“நான் இந்தியாவில் பிறந்தவன். எனது நாடு எனக்கு கல்வி, மதிப்பு, அறிவு கொடுத்தது. தொழில்நுட்பத்திற்குப் பாஸ்போர்ட் கிடையாது. நான் சேவை செய்வது மனித குலத்திற்கே” என்று அழுத்தமாக பதிலளித்தார்.

கைதட்டல் !!!

அவரது வார்த்தைகள் அரங்கில் இருந்தவர்களை வியக்க வைத்தன. கரவொலியும் முழங்கியது.

சவால் விடுத்த டிரம்ப்??

அடுத்த நாளும் டிரம்ப், “கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா?” என்று நேரடியாக சவால் விடுத்தார். 

சுந்தர் பிச்சை பதிலடி!!!

இதற்கு சுந்தர் பிச்சை, “அமெரிக்கா எனக்கு வாய்ப்பு தந்தது, இந்தியா எனக்கு வேர்களை தந்தது. நான் இரண்டையும் கௌரவிக்கிறேன். எனது சேவை எல்லோருக்கும்” என்று பதிலளித்தார்.

மாநாட்டின் இறுதியில்.,

, டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு சந்தையைத் திறக்காவிட்டால் தடைகள் வரும்” என இறுதி எச்சரிக்கை விடுத்தார். 

#பயமா அது எனக்கா ???

இதற்கு சுந்தர் பிச்சை, 

“பயத்தால் அடிபணிய மாட்டேன். மரியாதைக்கே மட்டும் கட்டுப்படுவேன். எந்த தேசமாயினும் சரணடைய மாட்டேன்” என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை யின் கொள்கை உறுதி 

அவரது பேச்சுக்கு பல தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது வணிக பேச்சுவார்த்தையை தாண்டி, மனிதநேயம், தலைமைத்துவம், மற்றும் கொள்கைகள் பற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

"சுந்தர் பிச்சையின் இந்த வார்த்தைகள் உலக இளைஞர்களுக்கு பெருமை மற்றும் நம்பிக்கையை விதைத்ததாகவும், “அதிகாரத்தைவிட கொள்கையே வலிமையானது” என்பதை உலக வரலாற்றில் பதித்துவிட்டதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்."


👉 

செவ்வாய், 15 ஜூலை, 2025

மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? - சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) என்ற செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ்


## டிஜிட்டல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி


இந்த செயலி டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும், போலியான அழைப்புகள் மற்றும் மோசடிகளில் புகார் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த செயலியின் முக்கிய அம்சங்களில் பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்புகளை சரிபார்க்கும் வசதியும் அடங்கும்.


சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பேரில் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் ....

இந்த செயலி உதவியாக உள்ளது. மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலும், அதை கண்காணிக்கவோ அல்லது முடக்கவோ CEIR (Central Equipment Identity Register) அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.


## சிம் கார்டு எப்படி செயல்படுகிறது?


சிம் கார்டு (Subscriber Identity Module) என்பது மொபைல் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறிய மின்னணு சிப். இது மொபைல் எண்ணை அடையாளப்படுத்தி, மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது.


சிம் கார்டில் IMSI (International Mobile Subscriber Identity) எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணும், சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் authentication key-யும் சேமிக்கப்பட்டிருக்கும். 


இவை பயனர்களின் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, அழைப்புகள் செய்யவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகின்றன.


## புதிய தொழில்நுட்பம் - eSIM


eSIM என்ற புதிய தொழில்நுட்பம் இன்று பிரபலமாகி வருகிறது. 

இது மொபைல் போனில் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் சிம்மாக செயல்படுகிறது. eSIM மூலம், வெளிநாடு செல்லும்போது சிம் கார்டை மாற்றாமல், எளிதாக நெட்வொர்க்குகளை மாற்றலாம். 


இது சிம் கார்டு தொலைவது அல்லது திருடப்படுவது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறது.


## பழைய சிம் எண் யாருக்கு செல்கிறது?


ஒரு சிம் கார்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்துவிடும்.


 இந்தியாவில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்த குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். 


இது முந்தைய உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது.


ஆனால், அதே குறிப்பிட்ட எண்ணை புதிய பயனருக்கு ஒதுக்கும்போது, முந்தைய உரிமையாளரின் தரவு முழுமையாக அழிக்கப்பட வேண்டும். 


தரவுகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.



## சிம் ஸ்வாப் மோசடிகள் - எச்சரிக்கை!


சிம் ஸ்வாப் மோசடிகள் என்பது மொபைல் எண்ணை வேறு நபரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, புதிய சிம் கார்டு மாற்றி மோசடியில் ஈடுபடுவதாகும். 


இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான பிறந்த தேதி, ஆதார் விவரங்கள், முகவரி ஆகியவற்றை சேகரிக்கின்றனர்.


பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஏமாற்றி, உண்மையான உரிமையாளர் போன்று காட்டிக்கொண்டு "எனது சிம் கார்டு தொலைந்துவிட்டது" என்று கூறி, அந்த எண்ணை புதிய சிம்முக்கு மாற்றுகின்றனர்.


 இதனால், அந்த எண்ணுக்கு வரும் OTP-கள் மோசடி செய்பவர்களுக்கு செல்கின்றன.


## தரவு பாதுகாப்பு குறித்த கவலைகள்


சிம் கார்டு காலாவதியானால், அதில் உள்ள தரவு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அழிக்கப்பட வேண்டும். ஆனால், சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறு அல்லது முறையற்ற அழிப்பு முறைகள் காரணமாக, தரவு முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம். இதனால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


## சிம் கார்டு வாங்கும் வரம்பு


TRAI விதிகளின்படி, ஒரு நபர் தனது ஆதார் அடையாளத்துடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கலாம். இது மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வரம்பை மீறுகின்றனர்.


## பாதுகாப்பு நடவடிக்கைகள்


சிம் ஸ்வாப் மோசடிகளைத் தவிர்க்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:


தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்: 


ஆதார் விவரங்கள், வங்கி தகவல்கள் ஆகியவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம்.


கூடுதல் பாதுகாப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் மாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்த கோரலாம்.


சந்தேகத்திற்கிடமான அழைப்புகள்:

போலியான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க, சஞ்சார் சாதி இணையதளத்தை (https://www.sancharsaathi.gov.in/) அல்லது செயலியை பயன்படுத்தலாம்.


உடனடி நடவடிக்கை:


மொபைல் எண்ணில் திடீரென சேவை நிறுத்தப்பட்டால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.


## அரசின் புதிய முயற்சிகள்


சிம் ஸ்வாப் மோசடிகளைத் தடுக்க, இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 24 மணி நேர SMS தடை போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் மோசடிகளைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


## முடிவுரை


சிம் ஸ்வாப் மோசடிகள் மற்றும் தரவு திருட்டு இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள் மோசடிகளைக் குறைக்க உதவினாலும், பயனர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.


உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்து, சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்பு வந்தாலும் உடனடியாக சஞ்சார் சாதி செயலி மூலம் புகாரளியுங்கள்!

இங்கே Sanchar Saathi செயலியின் தமிழில் தூத்துக்குடி லீக்ஸ் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைப்புகள்:

🔹 Android (கூகுள் பிளே ஸ்டோர்):

செயலியை Android போனுக்கு இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:

https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi 

லிங் இதை தொடவும் செயலி கிடைக்கும் 


🔹 iPhone (ஆப்பிள் App Store):

iPhone-க்கு இங்கே பதிவிறக்கம் செய்யலாம்:

https://apps.apple.com/in/app/sanchar-saathi/id6739700695


🔹 இணையதளம் (வலைதளம் வழியாக பயன்பாடு):

உதவிகள் மற்றும் சேவைகள் இணையதளத்தில் கிடைக்கும்:

https://www.sancharsaathi.gov.in/

ling leaks --இதை தொடவும் செயலி கிடைக்கும்


Sanchar Saathi செயலியின் முக்கிய பயன்பாடுகள்:


உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் எண்ணுகளையும் காணலாம்


தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைலைத் தேடலாம்


மோசடி மற்றும் தவறான பயன்பாடுகளை புகாரளிக்கலாம்

--

தூத்துக்குடி லீக்ஸ் - உங்கள் நம்பகமான செய்தி 

வியாழன், 23 பிப்ரவரி, 2023

செல்போனில் தேவையற்ற spam call (ஸ்பேம் கால்) வராமல் தடுப்பது எப்படி?! விளக்கம்!!!!

 thoothukudileaks 23-2-2023

நம்நாட்டில் கைபேசி  இல்லாத மனிதன் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது .

தற்போது செல்போனில் விளம்பரங்கள் கடன் வசதி குற்ற செயல் புரியும் ஹேங்கர் இவர் கள் முலம் தேவையற்ற போன் அழைப்புகள் - வருகிறது ஏன்?  சிம் கார்டு நிறுவன டீலர் ரிக்கார்டிங் வாய்ஸ் கால்  கூட அடிக்கடி தீரா தொல்லை தரும் கால்கள் வருகின்றனர்.

இப்படி  நாம் கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை தடுக்கலாம்.    




நாம் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நமக்கு ஒரு புதிய நம்பரிலிருந்து அழைப்பு வரும். நாமும் ஏதோ முக்கியமான போன் கால் என நினைத்து அவசரமாக போனை எடுப்போம். 



ஆனால் அது ஸ்பேம் கால் அல்லது கஸ்டமர் கேர் கால் அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடும் எண்களில் இருந்து வரும் போன் அழைப்புகளாக இருக்கும்.

 இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இப்படியான ஸ்பேம் அழைப்புகள் வராமல் தடுக்கலாம்.

அதற்கு செல்போன் ல  கீழ்க்கண்ட படி செய்யுங்கள்.


 நீங்கள் ஆன்ராய்டு அல்லது ஐபோன் பயன்படுத்துபவரா.? 

இந்த ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களையும் , உங்கள் தொலைபேசி அழைப்புகளையும் தற்காத்து கொள்ளலாம்.

 ஆன்ராய்டு செல்போன் பயனாளர்கள்:


கைபேசி பயன்படுத்துவோரில்  ஆன்ராய்டு செல்போன் பயனாளர்கள்தான் அதிகம். ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டுக்கள் அதிகமாக ஆன்ராய்டு பயனாளர்களை குறிவைத்தே நடைபெறுகிறது. எனவே தேவையற்ற அழைப்புகளை நிறுத்தவோ, முடக்கவோ பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு பயன் தரும்.


முதலில் பிளே ஸ்டோரில் கூகுள் டயலரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சில ஆன்ராய்டு போன்களில் கூகுள் டயலர் நிரந்தரமாகவே இருக்கும். அப்படி இல்லையெனில் கூகுள் டயலரை டவுன்லோட் செய்யவும். அதன் பின்னர் கூகுள் டயலரில் வலது மேல் ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தினால் செட்டிங்கிற்கு செல்லும். செட்டிங்கில் Caller ID and Spam என்ற தேர்வு இருக்கும். அதனுள் சென்றால் Filter Spam Calls என்பதனை அழுத்தினால் உங்களுக்கு வரும் தேவையற்ற , சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை உடனே முடக்கலாம்.


 ஒரு வேளை நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் கைபேசியை பயன்படுத்துவோராக இருந்தால் ஸ்பேம் கால்களை முடக்குவது மிக சுலபம். உங்கள் சாம்சங் டயலரில் உள்ள செட்டிங்கிற்கு சென்றாலே ஸ்பேம் அழைப்புகளை முடக்கும் (Block Spam and Spam Calls) எனும் தேர்வு இருக்கும் அதன் உபயோகித்து ஸ்பேம் அழைப்புகள் உங்களுக்கு வராமல் துண்டித்து கொள்ளலாம்.


ஐபோன் பயனாளர்கள் 

போனில் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு முதலில் ட்ரூ காலர் எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

அதன் பின்னர் உங்கள் எண் மற்றும் இமெயில் முகவரி மற்றும் அதில் கேட்கும் விபரங்களை நிரப்பிய பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கிற்கு செல்ல வேண்டும்.


பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கில் உள்ள போன் செட்டிங் விபரங்களுக்குள் செல்ல வேண்டும். அதில் அழைப்புகளை முடக்குவதற்கான (Call Blocking) செட்டிங்ஸ் இருக்கும். அதனுள் சென்றால் நான்கு விதமான விருப்பங்களை காண்பிக்கும். அவை அனைத்தையும் ஆன் செய்தால் உங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் இனி வரவே வராது.

எனவே சைபர் திருட்டுக்கள் தொடர்பான அழைப்புகள் உங்கள் கைப்பேசியில் வராமல் தற்காத்துக் கொள்ளுங்கள். .