புதன், 5 ஜனவரி, 2022

கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் விஷயத்தில் .. வரலாற்று பிழை செய்ய வேண்டாம் ....தமிழக அரசிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை _ வேண்டுகோள் ! .

 தூத்துக்குடி மாநகர ஒட்டு மொத்த மக்களுக்காக, அவர்கள் தாகம் தீர்க்க குடிநீர் கொண்டு வர வேண்டும் என்று அரும்பாடுபட்டு திட்டங்களை நிறைவேற்றியவர் கோமான் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் ஆவார்.





 அன்னார் அவர்கள்  தன் பதவி பலத்தைக் கொண்டு அவரது சந்ததிகளுக்கு சொத்து மற்றும்  பணம் சேர்த்துக் குவிக்கவில்லை. அது போன்ற அற்பத்தனமான ஆசைகளுக்கு சிறிதும் அடிமை படவில்லை.


மாறாக தன்னிடம் இருந்த சொத்துக்களை கூட  பொதுமக்களுக்கு வாரி வாரி வழங்கியுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.


அவ்வாறு அனைத்து பொதுமக்களும் பயன் அடைந்ததில் பழைய நகராட்சிக் கட்டிடம், மூன்றாம் மைல் மையவாடி, வ.உ.சி சந்தை ..... என பட்டியலிட்டு கொண்டு போகலாம்.


தற்போது அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து விட்டு அதனை தூத்துக்குடியை விட்டு வெளியே வல்லநாட்டில் கட்டப்போவதாக செய்திகள் உலவி வருகின்றன. 

இது உண்மையாக இருந்தால் இது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை. 


ஊருக்கு, தனது மொத்த சொத்தையும்  மக்கள் நலனுக்காக தானங்கள் செய்தும், நாம் அதன் பயனை அனுபவித்து வந்தும், தற்போது அவருக்கு மணிமண்டபம் கட்ட ஊருக்கு வெளியே வல்லநாட்டிலோ, தூத்துக்குடியில் ஒரு ஒதுக்குப்புறத்திலோ இடம் தீர்மானிப்பது என்பது வரலாற்று பிழையாகவே அமையும்


அந்த வரலாற்று தவறை தமிழக அரசு இழைத்திட  வேண்டாம்  என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கேட்டு கொள்கிறோம்.


சொ.ராஜா B.A.,L.L.B.,

மாநில அமைப்பாளர்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக