வியாழன், 1 அக்டோபர், 2026

தூத்துக்குடி மண்டலத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் ஆனையர் பிரியங்கா மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

Tamil Nadu updates,

 photo news by Arunan Reporter 


தூத்துக்குடி மண்டலத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம்

கட்டணமில்லா பேருந்து சேவைகளின் வழித்தட விவரங்கள் வெளியீடு

தூத்துக்குடி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் சார்பில் செயல்படுத்தப்படும் மகளிர் வெற்றிப் பயணம் திட்டம், தூத்துக்குடி மண்டலத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10.15 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ். பிரியங்கா மற்றும் தூத்துக்குடி மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


தொடர்ந்து, பேருந்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர், மாணவிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட சாதாரண சேவை பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள கோவில்பட்டி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி டவுன், தூத்துக்குடி புறநகர், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட பணிமனைகளின் கீழ் இயங்கும் பல்வேறு சாதாரண சேவை பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.


முக்கிய வழித்தடங்கள்

கோவில்பட்டி பணிமனையில் இருந்து புதியம்புத்தூர், மதுரை மாட்டுத்தாவணி, தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி சந்திப்பு, கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சாத்தான்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் உடன்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சாத்தான்குளம், உடன்குடி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் வெற்றி பயணம் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் பரபரப்பு பேச்சு 

தூத்துக்குடி டவுன் பணிமனையில் இருந்து மலைப்பட்டி, பரிவள்ளிக்கோட்டை, உவரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் கோயில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


தூத்துக்குடி புறநகர் பணிமனையில் இருந்து வேப்பங்குளம், திருநெல்வேலி, புளியம்பட்டி, கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட வழித்தடங்களிலும், திருச்செந்தூர் பணிமனையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும் சாதாரண சேவை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விளாத்திகுளம் பணிமனையில் இருந்து கோவில்பட்டி, சாயல்குடி, புதூர், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி உள்ளிட்ட வழித்தடங்களிலும் சேவைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன், பணி அமைப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு மேலாளர் சண்முகம், தூத்துக்குடி மண்டல துணை உதவி மேலாளர் வேல்முருகன், நகர கிளை மேலாளர் ரமேஷ் கார்த்திக், புறநகர் கிளை மேலாளர் குமார் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் தட எண், பணிமனை மற்றும் வழித்தட நீளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்து சேவையை அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


🤷🏻‍♀️ Thoothukudi LEAKS...

தூத்துக்குடி மண்டலம் சார்பாக மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான கட்டணமில்லாப் பேருந்துகளின் விவரங்கள்

தமிழ்நாட்டின் பிற மண்டலங்களைப் போலவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் - தூத்துக்குடி மண்டலத்திலும் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இது, தூத்துக்குடி மண்டலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் மாணவிகளுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பதிவில் பேருந்துகளின் தடம் மற்றும் வழித்தடத்தின் நீளம் போன்றவை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


📍 கோவில்பட்டி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பணிமனைகள்

  1. 🚌 149-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ புதியம்புத்தூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.5 கிமீ

  2. 🚌 149-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ புதியம்புத்தூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 60.0 கிமீ

  3. 🚌 149-C | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  4. 🚌 149-D | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ தூத்துக்குடி பழைய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 101.8 கிமீ

  5. 🚌 149-E | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ தூத்துக்குடி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  6. 🚌 151-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  7. 🚌 151-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  8. 🚌 151-D | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  9. 🚌 151-J | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  10. 🚌 151-K | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  11. 🚌 151-O | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ ராஜபாளையம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.1 கிமீ

  12. 🚌 158-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ திருநெல்வேலி சந்திப்பு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 80.2 கிமீ

  13. 🚌 169-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ கயத்தாறு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.2 கிமீ

  14. 🚌 501-C | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  15. 🚌 501-E | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 110.1 கிமீ

  16. 🚌 502-A | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  17. 🚌 502-B | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  18. 🚌 502-F | கோவில்பட்டி | கோவில்பட்டி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  19. 🚌 134-KD | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 16.8 கிமீ

  20. 🚌 134-XF | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  21. 🚌 137-I | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 67.3 கிமீ

  22. 🚌 165-C | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.0 கிமீ

  23. 🚌 165-E | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.2 கிமீ

  24. 🚌 165-XM | சாத்தான்குளம் | சாத்தான்குளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 47.0 கிமீ

  25. 🚌 137-C | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி புதிய B/S ↔ சாத்தான்குளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 59.1 கிமீ

  26. 🚌 137-D | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  27. 🚌 137-E | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  28. 🚌 137-F | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  29. 🚌 137-G | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 74.6 கிமீ

  30. 🚌 137-H | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ உடன்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.3 கிமீ

  31. 🚌 144-A | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  32. 🚌 144-C | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  33. 🚌 144-D | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 37.9 கிமீ


📍 ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி டவுன் மற்றும் தூத்துக்குடி புறநகர் பணிமனைகள்

  1. 🚌 147-B | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 49.7 கிமீ

  2. 🚌 578-A | ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவைகுண்டம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  3. 🚌 104-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ மலைப்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.0 கிமீ

  4. 🚌 105-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ பரிவள்ளிக்கோட்டை | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  5. 🚌 105-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ பரிவள்ளிக்கோட்டை | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.0 கிமீ

  6. 🚌 143-C | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ உவரி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 96.0 கிமீ

  7. 🚌 146-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  8. 🚌 146-B | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  9. 🚌 146-C | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  10. 🚌 146-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  11. 🚌 146-E | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  12. 🚌 146-F | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ நாசரேத் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 0.0 கிமீ

  13. 🚌 147-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ ஸ்ரீவைகுண்டம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  14. 🚌 147-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ ஸ்ரீவைகுண்டம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 42.3 கிமீ

  15. 🚌 157-A | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ திருச்செந்தூர் கோயில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 46.0 கிமீ

  16. 🚌 157-D | தூத்துக்குடி டவுன் | தூத்துக்குடி ↔ திருச்செந்தூர் கோயில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 61.0 கிமீ

  17. 🚌 104-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ வேப்பங்குளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.0 கிமீ

  18. 🚌 150-B | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  19. 🚌 150-C | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  20. 🚌 150-F | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  21. 🚌 150-G | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  22. 🚌 150-J | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  23. 🚌 150-N | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.0 கிமீ

  24. 🚌 158-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ புளியம்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 55.1 கிமீ

  25. 🚌 169-A | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ கயத்தாறு | சாதாரண சேவை (ORD) | 🛤️ 46.0 கிமீ

  26. 🚌 183-B | தூத்துக்குடி MOF | தூத்துக்குடி ↔ விளாத்திகுளம் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  27. 🚌 134-C | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  28. 🚌 134-D | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  29. 🚌 134-G | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 62.0 கிமீ

  30. 🚌 134-KC | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 65.0 கிமீ

  31. 🚌 134-KF | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ திருநெல்வேலி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 52.0 கிமீ

  32. 🚌 572-XA | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ நாகர்கோவில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 120.2 கிமீ

  33. 🚌 572-XB | திருச்செந்தூர் | திருச்செந்தூர் கோயில் ↔ நாகர்கோவில் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 48.5 கிமீ

  34. 🚌 183-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  35. 🚌 183-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 51.0 கிமீ

  36. 🚌 183-F | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ கோவில்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.5 கிமீ

  37. 🚌 183-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ தூத்துக்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 37.5 கிமீ


📍 விளாத்திகுளம் பணிமனை

  1. 🚌 183-XA | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ கோவில்பட்டி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 35.5 கிமீ

  2. 🚌 189-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ சாயல்குடி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 40.0 கிமீ

  3. 🚌 189-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ புதூர் | சாதாரண சேவை (ORD) | 🛤️ 18.6 கிமீ

  4. 🚌 502-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  5. 🚌 502-H | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  6. 🚌 502-J | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 99.5 கிமீ

  7. 🚌 503-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ திருநெல்வேலி புதிய B/S | சாதாரண சேவை (ORD) | 🛤️ 126.5 கிமீ

  8. 🚌 587-A | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  9. 🚌 587-B | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  10. 🚌 587-C | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  11. 🚌 587-D | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  12. 🚌 587-E | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  13. 🚌 587-G | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  14. 🚌 587-H | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ

  15. 🚌 587-J | விளாத்திகுளம் | விளாத்திகுளம் ↔ மதுரை மாட்டுத்தாவணி | சாதாரண சேவை (ORD) | 🛤️ 104.7 கிமீ


புதன், 30 செப்டம்பர், 2026

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், அண்ணாநகர் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சிக்கு கோரிக்கை

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம், அண்ணாநகர் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சிக்கு கோரிக்கை!!!

தூத்துக்குடி: செப் 30

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே சாலை மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும், அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடையை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் போர்ட் சிட்டி வெல்ஃபேர் அசோசியேசன் தலைவர்  கணேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில், தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருப்பதுடன், சென்ன ை, பாலக்காடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கீழூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் பயணிகள் நலன் கருதி மேலூர் ரயில் நிலையத்தின் தென்புறத்தில், தேவாலயம் முதல் மேலூர் ரயில்வே டிக்கெட் முன்பதிவு அலுவலகம் வரையிலான கிழக்கு–மேற்கு தார் சாலையையும், வடிகால் வசதியையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்புறத்தில் இருந்து வரும் பயணிகள் ரயில்வே கேட்டை கடக்காமல் மேலூர் ரயில் நிலையத்திற்குள் செல்ல வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அண்ணாநகர் பிரதான சாலையில் விவிடி சிக்னல் முதல் நான்காம் கேட் வரையிலான இருபுற நடைமேடைகளும் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ...மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்தின் தரைத்தளம் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீரும் சகதியும் தேங்கி வாகனங்களை நிறுத்துவோர் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே, தரைத்தளத்தை தரமான சிமெண்ட் தளமாக அமைத்து, மேற்கூரையும் அமைத்து தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 29.05.2026 அன்று ஏற்கனவே மாநகராட்சியிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என போர்ட் சிட்டி வெல்ஃபேர் அசோசியேசன் தலைவர் கணேசன் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

தூத்துக்குடியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி!!!

தூத்துக்குடி: தூத்துக்குடி புனித மரியன்னா கல்லூரியின் மகளிர் மன்றம், வீராங்கனை மற்றும் Children and Youth Lives Matter அமைப்பு ஆகியவை இணைந்து, “ஒளிமயமான, பாதுகாப்பான நாளைக்காக” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை செப்டம்பர் 29, 2026 அன்று நடத்தின.


குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெற்றது. 


கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர்  எழிலரசி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கைக்கான உயர்நிலைக் குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் ஜவஹர் நேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி முனைவர் . குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர்  ஷிபானா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி நடைபெற்றது.


சமூகச் செயல்பாட்டாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியருமான பாத்திமா பாபு, சமூக அரசியல் செயல்பாட்டாளர் வழக்கறிஞர் சர்தார் ஜீவன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்  சசிமுகஜோதி, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரீனா, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர்  நிரஞ்சனி, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆஸ்ட்ரூஸ் பெலிசிட்டா ஆகியோர் செய்திருந்தனர்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

பரபரப்பாக நடைபெற்ற. தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

Tamil Nadu updates 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி:செப் 30.       

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் இன்று (30.09.2026) காலை 11.15 மணிக்கு மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் உள்ள மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பிரியங்கா துனை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் கவுன்சிலர் கலந்து கொண்ட மாமன்ற கூட்டத்தில்....


மாநகராட்சியின் 60 வார்டுகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை சீரமைப்பு, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகள் குறித்து மன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


குறிப்பாக, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.44.50 லட்சம் மதிப்பீட்டில் தார் மற்றும் சிமெண்டு சாலைப் பணிகளை மேற்கொள்ள முன்மொழியப்பட்டது.


மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளுக்காக மின்கம்பியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஏணி வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 26 பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான விவாதமும் இடம்பெற்றது.

thoothukudileaks


குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் தொடர்பான பணிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுசுகாதாரப் பணிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு பொருட்கள் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


இதுதவிர, தெற்கு மண்டலத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மயானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அதனை ஆறு மாத காலம் சோதனை அடிப்படையில் பராமரித்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மேலும் வடக்கு மண்டலத்தில் அமைக்கப்பட்டு வரும் தினசரி சந்தையில் உள்ள 47 கடைகளை இணையவழி ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி மூலம் வாடகைக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.

"பத்திரப்பதிவு குறித்து கவுன்சிலர் கனகராஜ் கேள்வி எழுப்பி போது...

கடந்த 2026  பெப்ரவரி மாதத்திலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி  இருந்து  LR copy கொடுக்கவில்லை ... ஆனால்?

 போலி L R copy வைத்து பத்திர பதிவு நடந்து வருது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என மேயர் தரப்பில் தெரிவித்தார் .


மாமன்ற கூட்டத்தில் ...

தூய்மை பணியாளர்கள் குறித்து கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்தனர் அதற்கு ஆணையர் பிரியங்கா பொதுமக்கள் தான் பிரித்து கொடுக்க வேண்டும் தெரிவித்தார் இதனால்  கவுன்சிலர்கள் மற்றும் ஆணையர் பிரியங்கா வுடன் கடும் வாக்கு வாதம் செய்தனர்  மேயர் ஜெகன் பெரியசாமி இஃது பற்றி பெண் கவுன்சிலர் பேச்சுக்கு பதில் தெரிவித்தார்.மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் விளக்கம் கொடுத்தனர்.


மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான பல்வேறு வளர்ச்சிப் பணிகள், பொதுமக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து மாமன்றக் கூட்டத்தில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



 தூத்துக்குடியில் ரூ.90 கோடி திட்டம்! 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை ரூ.90 கோடி மதிப்பில் மறுமேம்படுத்தும் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பணிகள் பொது-தனியார் கூட்டுமுறையில் மேற்கொள்ளப்பட உள்ளன.

📌 டெண்டர் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.15, 2026

⏰ நேரம்: காலை 11 மணி வரை

📂 டெண்டர் திறப்பு: அக்.15 பிற்பகல் 12.30 மணி

புதிய பேருந்து நிலையம் நவீனமயமாகும் இந்தத் திட்டம் தூத்துக்குடி நகரின் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வசதிகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்துதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி நாள்: 29.09.2026

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்துதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தூத்துக்குடி: செப் 29 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் ஓய்வறைகளை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்களைக் காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

thoothukudileaks


thoothukudileaks


தொடர் புகார்களும் தாமதமான நடவடிக்கையும்: தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலைய ஓய்வறை மற்றும் வளாகப் பகுதிகளில் தங்கியிருக்கும் நரிக்குறவ இன மக்களால் பயணிகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுவதாகவும், திருட்டுச் சம்பவங்கள், சுகாதாரச் சீர்கேடு, சண்டை சச்சரவுகள், மது அருந்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகவும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து,...

 தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வட்டார சிறுதொழில் மற்றும் வியாபாரிகள் ஐக்கிய சங்கம் மற்றும் ஆம்னி பஸ் புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் சார்பில் கடந்த 21.08.2026 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. 


இதேபோல் பல்வேறு அமைப்புகளும் பயணிகளும் தொடர்ச்சியாகப் புகார்களைத் தெரிவித்து வந்த நிலையில், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.

அரசு நிலம் ஒதுக்கியும் தொடரும் ஆக்கிரமிப்பு: 

கடந்த ஆண்டுகளில் நரிக்குறவ மக்களுக்குப் பேரரூணி பகுதியில் வீடுகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் அவர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலேயே தங்கி வந்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக..சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலம் மாப்பிள்ளையூரணி பகுதியில் 52 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு குடியேறுமாறு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அங்குச் செல்லாமல் ஆம்னி பேருந்து நிலையப் பயணிகள் தங்கும் இடங்களை ஆக்கிரமித்து, பயணிகள் நிம்மதியாகப் பேருந்து ஏறிச் செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி அகற்றம்: பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகார்களின் எதிரொலியாக, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் மூனீர் அகமது தலைமையில், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் (பொக்லைன் தண்ணீர் பீச்சி அடிப்பு வாகனம் மாநகராட்சி  வாகனம்)ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks
தூத்துக்குடி வடக்கு மண்டல
மாநகராட்சி உதவி ஆணையர் முனீர் அகமது


அப்போது அங்குத் தங்கியிருந்த சிலர், "நாங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம்" என்று எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

thoothukudileaks
அந்த நபரை போலீசார் பிடித்து இழுத்து வந்தனர் 


மேலும், ஒருவர் தீக்குளிக்கப் போவதாக அச்சுறுத்தியதுடன், அங்கிருந்த சிறுவர் சிறுமியர் வரை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தவாறு எதிர்ப்பைக் காட்டினர்.


பொருட்கள் அகற்றம் - பகுதிக்கு 'வரவிடமாமல் டேப் சீல்'கட்டப்பட்டது : 

நிலைமையைச் சுதாகரித்துக் கொண்ட வடபாகம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர், புகார்களின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

சிறுமிகள் செல்போனில் வீடியோ எடுத்து எதிர்ப்பு காட்டி ய பரபரப்பு வீடியோ பார்க்க 

அதைத் தொடர்ந்து, ஆம்னி பஸ் இருக்கைப் பகுதிகளில் போடப்பட்டிருந்த மெத்தைகள், ஃபேன் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புப் பொருட்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். 

பின்னர் அப்பகுதிக்குத் தடுப்புப் நாடா (Tape) கட்டிச் சென்றனர்.

thoothukudileaks


பாரபட்சமின்றி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை:  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே குடும்ப சகிதமாக முன்று கும்பல் ஆக்ரமிப்பு 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடும்ப சகிதமாக நரிக்குறவர் கும்பல் போல் இன்னும் இரண்டு கும்பல் குடும்ப சகிதமாக ஆக்ரமிப்பு செய்து வருகிறது



  குடும்ப சகிதமாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே குடும்ப சகிதமாக தங்கி இருக்கும் மூன்று கும்பலை  அகற்ற வேண்டும் என  பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 


தூத்துக்குடி பேருந்து நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித பாரபட்சமுமின்றி பேருந்து நிலையத்திற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அனைத்துக் கும்பல்களையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  

திங்கள், 28 செப்டம்பர், 2026

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை விரைந்து அமைக்க ‘போர்ட்சிட்டி வெல்ஃபேர் அசோசியேஷன்’ கோரிக்கை!

thoothukudileaks daily news 

Tamil Nadu updates 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை விரைந்து அமைக்க ‘போர்ட்சிட்டி வெல்ஃபேர் அசோசியேஷன்’ கோரிக்கை!

தூத்துக்குடி: செப் 28

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக் கோரி, 'போர்ட்சிட்டி வெல்ஃபேர் அசோசியேஷன்' சார்பாக கீழூர் ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.


இது குறித்து போர்ட்சிட்டி வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் . D. கணேசன், செயலாளர் . K. சண்முகவேல் மற்றும் பொருளாளர் . M. கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"கடந்த ஜனவரி 2026 முதல் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்கள், மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

 ரயில்வே நிலையம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரேயும், நகரின் மையப்பகுதியிலும் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

thoothukudileaks



 பெரும்பாலான பயணிகள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த மேலூர் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.


அதிகாலை முதல் நள்ளிரவு வரை ரயில்கள் இயங்குவதால், நாள் முழுவதும் பயணிகள் நடமாட்டம் மிகுந்த முக்கிய இடமாக இந்நிலையம் விளங்கி வருகிறது. ஆனால், இங்கு பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக செய்து தரப்படவில்லை.

எனவே, பயணிகள் நலன் கருதி பின்வரும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்:

  1. கழிவறை வசதி: பயணிகள் பயன்பாட்டிற்கான சுகாதாரமான கழிவறைகளை அமைக்க வேண்டும்.
  2. சிற்றுண்டி உணவகம்: சிறிய அளவிலான தேநீர் மற்றும் சிற்றுண்டிக் கடை அமைக்கப்பட வேண்டும்.
  3. முழுநேர டிக்கெட் கவுண்டர்: முன்பதிவு செய்வதற்கான இணையதள வசதியுடன் கூடிய முழுநேர பயணச்சீட்டு மையத்தை இயக்க வேண்டும்.
  4. நிழற்கூரை (Passenger Shed): வெயில் மற்றும் மழையிலிருந்து பயணிகளைப் பாதுகாக்க நடைமேடை முழுவதும் கூரை அமைக்க வேண்டும்.
  5. குடிநீர் வசதி: பயணிகள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
  6. மேம்பாலப் பணியை விரைவுபடுத்துதல்: நடைமேடை 1 மற்றும் 2-ஐ இணைக்கும் 'நடைமேம்பால' (Passenger Foot Bridge) பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த வேலையை விரைவுபடுத்தி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இது தொடர்பாக கடந்த மார்ச் (06.03.2026) மற்றும் மே (29.05.2026) ஆகிய மாதங்களில் ஏற்கனவே கடிதம் அனுப்பியும், 5 மாதங்களுக்கு மேலாக ரயில்வே நிர்வாகத்திடமிருந்து எந்தவித பதிலும் வராதது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.


எனவே, ரயில்வே நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல், மேலூர் ரயில் நிலையப் பயணிகளின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

thoothukudileaks
model photo


இக்கோரிக்கையின் நகல் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளருக்கும் (Divisional Railway Manager - DRM) அனுப்பப்பட்டுள்ளது


செய்தி புகைப்படத்தில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்களுக்கான தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம்

 


தூத்துக்குடியில் உலக ரேபிஸ் தின தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம்  மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, செப். 28:
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை ஆகியவை இணைந்து, உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கான தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்றது.
thoothukudileaks


இம்முகாமை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில்,...
"மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநோய் பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தடுப்பூசி முகாம் மிகவும் அவசியமானது" என்று குறிப்பிட்டார். 
thoothukudileaks


பொதுமக்களும் தங்களது செல்லப்பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் விஜயகுமார், தலைமை கால்நடை மருத்துவர் பழனி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
thoothukudileaks


இம்முகாமில் நூற்றுக்கணக்கான வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மருத்துவக் குழுவினரால் வெறிநோய் தடுப்பூசிகள் (Anti-Rabies Vaccine) இலவசமாகப் போடப்பட்டன. மேலும், தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி மற்றும் நவீன முறையில் மேற்கொள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாடு (ABC) திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் தங்களது செல்லப்பிராணிகளுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.