புதன், 30 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

தூத்துக்குடியில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி!!!

தூத்துக்குடி: தூத்துக்குடி புனித மரியன்னா கல்லூரியின் மகளிர் மன்றம், வீராங்கனை மற்றும் Children and Youth Lives Matter அமைப்பு ஆகியவை இணைந்து, “ஒளிமயமான, பாதுகாப்பான நாளைக்காக” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை செப்டம்பர் 29, 2026 அன்று நடத்தின.


குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெற்றது. 


கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர்  எழிலரசி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கைக்கான உயர்நிலைக் குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் ஜவஹர் நேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி முனைவர் . குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர்  ஷிபானா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி நடைபெற்றது.


சமூகச் செயல்பாட்டாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியருமான பாத்திமா பாபு, சமூக அரசியல் செயல்பாட்டாளர் வழக்கறிஞர் சர்தார் ஜீவன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்  சசிமுகஜோதி, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ரீனா, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர்  நிரஞ்சனி, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆஸ்ட்ரூஸ் பெலிசிட்டா ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக