வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

மாமன்றக் கூட்டத்தில் தவெகவில் இனைந்த கவுன்சிலர்கள் அமளி வெளிநடப்பு? கல்வெட்டுகளில் யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு!

Tamil Nadu updates 

photo news by Arunan Reporter 

மாமன்றக் கூட்டத்தில் தவெகவில் இனைந்த கவுன்சிலர்கள் அமளி வெளிநடப்பு? கல்வெட்டுகளில் யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

thoothukudileaks


கூட்டம் தொடங்கியதும், ...சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்ட கவுன்சிலர்கள் மந்திர மூர்த்தி (முன்னாள் அதிமுக) மற்றும் ராமர் (முன்னாள் திமுக) ஆகியோர் தங்களது இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயரும் ஆணையரும் கேட்டுக்கொண்டனர்.

thoothukudileaks


இருப்பினும், அதை ஏற்க மறுத்த இருவரும் மேயரின் இருக்கை அருகில் வந்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

thoothukudileaks




 அப்போது, மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் 

"திமுக முன்னாள் எம்.எல்.ஏ சண்முகய்யா தொகுதியின் மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை விட்டுவிட்டு அமைச்சர் மதன் ராஜா பெயரைக் கல்வெட்டில் பொறித்துத் திறந்து வைக்கிறார்கள். யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "இங்குள்ள அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்த மன்றத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினர்.

thoothukudileaks


video பார்க்க 

இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையர் முன்பாகவே தவெக கவுன்சிலர்களிடம் அருகில் வந்து எதிர்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில்  கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தவெக உறுப்பினர்கள் இருவரும் மாமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

video பார்க்க 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுப் பரிசீலனைக்குப் பின் நிறைவேற்றப்பட்டன. மாமன்ற உறுப்பினர்களின் இந்த மோதல் சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




வியாழன், 27 ஆகஸ்ட், 2026

வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

 

“வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் பெயரில் வியாபாரிகளிடம் நிதி வசூல்? — மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி

தூத்துக்குடி:ஆக28

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வியாபாரிகளிடம் நிதி வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


thoothukudileaks


 இதற்காக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி நிதியுதவி கோருவதாக வியாபாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரக்கன்றுகளை நடுவதற்குத் தேவையான கூண்டு உள்ளிட்ட பொருட்களுக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் பல்வேறு வியாபாரிகள் மனஉளைச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“ஆணையர் உத்தரவு” என்ற பெயரில் வசூலா?

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் நடைபெறுவதாக கூறப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


முன்னதாக மாநகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பொதுநலப் பணிகளுக்காக வியாபாரிகளிடம் நிதியுதவி பெறப்பட்டபோது, நிதியுதவி செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், தற்போது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், வசூலிக்கப்படும் தொகைக்கு ரசீது அல்லது உரிய ஆவணங்கள் வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


ஏற்கனவே லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.


மேலும், இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மண்டலத் தலைவர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்குமா?

மரக்கன்றுகள் நடுவது வரவேற்கத்தக்க திட்டமாக இருந்தாலும், அதற்கான செலவினங்களை பொதுமக்கள் அல்லது வியாபாரிகளிடம் இருந்து கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என்பதே வியாபாரிகள் தரப்பின் கருத்தாக உள்ளது.


எனவே, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? வசூலிக்கப்படும் தொகை எந்தக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது? இதற்கான ரசீது வழங்கப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், அதிகாரிகளால் கட்டாய வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உடனடியாக விசாரணை நடத்தி, விதிமுறைகளை மீறி வசூல் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மரக்கன்றுகள் நடும் நல்ல திட்டம்—வசூல் சர்ச்சையால் விமர்சனத்திற்கு உள்ளாகாமல், திட்டத்தின் நிதி விவரங்களில் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்குமா? என்பதே தற்போது தூத்துக்குடி வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

புதன், 26 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்

 Tamil Nadu update photo news by Arunan Reporter 

தூத்துக்குடி யில்.... பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்


தூத்துக்குடி: ஆக 26

தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


வாசன் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேலாளர்கள் ராமராஜன், ரீகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.


முகாமை வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்து பேசினார்.


அப்போது டாக்டர் கனிமொழி கூறுகையில், ...

கண் பார்வை என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமானது. 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பார்வைக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையை விரைவாக மேற்கொள்வது நல்லது” என்றார்.


மேலும், தற்போது கண் மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளதுடன், பல்வேறு கண் குறைபாடுகளுக்கு லேசர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செல் போன் பார்ப்பது ..

கண்களுக்கு ஆபத்து !!!

குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், செல்போன், மடிக்கணினி, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் கனிமொழி அறிவுறுத்தினார்.


 குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களுக்கு ஓய்வு அளித்து பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

thoothukudileaks

thoothukudileaks


“வாசன் கண் மருத்துவமனை சார்பில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். 

பெருமிதம் 

தற்போது பத்திரிகையாளர்களுக்காக இந்த முகாமை நடத்துவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது” என்றும் டாக்டர் கனிமொழி தெரிவித்தார்.


video 

முகாமில் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு வகையான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


தொடர்ந்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் வாசன் கண் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிநாதன், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.


பத்திரிகையாளர்களுக்காக சிறப்பாக கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார். முகாமில் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திமுக நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமை ஆலோசிக்க வேண்டும்

திமுக நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு  நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமை ஆலோசிக்க வேண்டும்


தூத்துக்குடி: ஆக 26

 திமுகவின் சமீபத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சி அமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பகுதி செயலாளர், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட அமைப்பு பதவிகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து கட்சியினர் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

thoothukudileaks


இதன்படி, குறிப்பிட்ட அமைப்பு பதவிகளை இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றும், வட்ட செயலாளர் 45 வயது வரை மட்டுமே அந்தப் பதவிகளில் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால், 45 வயதுக்குள் ஒரு நிர்வாகியின் பதவிக்காலம் முடிவடைந்தால், அடுத்த கட்டத்தில் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.


மேலும், நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் திடீரென பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களைவிட வயது குறைந்த புதிய நிர்வாகிகள் அதே பொறுப்புக்கு வரக்கூடும். அப்போது, இதுவரை பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளின் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுவதால், கட்சிக்குள் சில சங்கடங்களும் நடைமுறைச் சிக்கல்களும் உருவாக வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் அனுபவமிக்க நிர்வாகிகளின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான விதிமுறைகளை திமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.


எனவே, இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிர்வாகிகளின் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி அழைப்பு ?முதல் பரிசு 10 ஆயிரம் தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா விவரம் படிக்க....!!!

Tamil Nadu updates, 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘குரு வனம்’ ஆசிரியர் தின பசுமை திருவிழா ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி....


தூத்துக்குடி: ஆக 25

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் – நகர பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’ நடத்தப்பட உள்ளது.



ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் பசுமை இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. 

thoothukudileaks



தேசிய ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை... ஒரு வார காலம் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.


இதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோரங்கள், வழிபாட்டுத் தலங்கள், தனியார் நிறுவனங்கள், நீர்நிலைப் பகுதிகள், தனியார் காலியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும், அவற்றுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்கும் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்த மாபெரும் பசுமை இயக்கத்தில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்க மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மண்டல வாரியான தொடர்பு அலுவலர்கள்


கிழக்கு மண்டலம்: வீ. அரி கணேசன் – 98425 30292

வடக்கு மண்டலம்: சி. ராஜசேகரன் – 80563 47075

தெற்கு மண்டலம்: ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் – 94435 28621

மேற்கு மண்டலம்: சு. ராஜபாண்டியன் – 94436 10511


மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்ய இடவசதி உள்ளவர்கள் மேற்கண்ட மண்டல வாரியான அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


சிறப்பாக செயல்படுவோருக்கு பரிசுகள்


‘குரு வனம் – ஆசிரியர் தின பசுமை திருவிழா’வில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்கள், பசுமைப் படைகள், நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் இயக்க அணிகள், அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.


பசுமை ஆர்வலர் கேடயம்!!!

மேலும், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் ‘பசுமை ஆர்வலர்’ கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.


ஆசிரியர் கெளரவிப்பு அனைவரும் பங்கேற்க வேண்டும்!!!

ஆசிரியர் பணியை கௌரவிப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் அவசியம் மற்றும் பசுமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பசுமை திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. பிரியங்கா, இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!

தூத்துக்குடி (ஆக. 25):

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், கேப்டனுமான விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மாவட்டத்தில் பட்டாசு வெடித்துக் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு மற்றும் இலவச  அரிசி வேட்டி சேலை நலத் திட்டங்கள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இது பற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள்:

 தூத்துக்குடி போல்டன்புரம்: மாவட்டத் துணைச் செயலாளர் லிவிங்ஸ்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச அரிசி பைகள் மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டன.


  தூத்துக்குடி அண்ணா நகர்: பகுதிச் செயலாளர் வல்லரசு ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள், அரிசி பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks



 தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட்: பகுதிச் செயலாளர் நாராயண மூர்த்தி ஏற்பாட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது.

thoothukudileaks





இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

சனி, 22 ஆகஸ்ட், 2026

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எழுச்சியுரை !!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்!!!!!

சென்னை: திமுகவை மேலும் வலுப்படுத்தவும், மீண்டும் மக்களின் முழு நம்பிக்கையைப் பெறவும் கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

thoothukudileaks


சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


கூட்டத்தில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள்:

  • இளைஞர்கள் மற்றும் பெண்கள் நம்பிக்கை: இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் முழுமையாகப் பெறும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
  • புதுமுகங்களுக்கு வாய்ப்பு: கட்சி நிர்வாகத்தில் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் பொறுப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
  • கட்சி மறுசீரமைப்பு: திமுகவை அடிமட்டம் முதல் மறுசீரமைப்பு செய்வதன் மூலமே அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.
  • ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகி: ஒரு மாவட்டச் செயலாளரை மட்டுமே நம்பி மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது; ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக உணர்ந்து செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்.
  • போராட்டக் குணம்: "நாம் ஏதோ பொழுதுபோக்கிற்காக (Bore அடிக்கிறது என) அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல, மக்களுக்காகப் போராட வந்தவர்கள்" என்பதை உணர்ந்து நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்ற வேண்டும்.

திமுகவின் இந்த மறுசீரமைப்பு அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்க விழாவில் ‘திரு இருதய நண்பர்கள்’ சார்பில் நல உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி பார்வையற்றோர் நலச்சங்கம் சார்பில் பார்வையற்றோருக்கான நல உதவி வழங்கல் விழா, பிரையன்ட் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் 'திரு இருதய நண்பர்கள்' அமைப்பினர் திரளாகக் கலந்துகொண்டு, பார்வையற்றோருக்குத் தேவையான பல்வேறு நல உதவிகளையும், தங்களது முக்கியப் பங்களிப்பையும் வழங்கினர்.
thoothukudileaks


நிகழ்ச்சியில் '....

திரு இருதய நண்பர்கள்' அமைப்பின் தலைவர் மா. தங்கையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்குக் கரம்கொடுத்து உதவுவது நமது சமூகக் கடமை. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற அமைப்புகள் செய்யும் பணிகள் போற்றத்தக்கவை" எனக் குறிப்பிட்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவின் நிறைவில் கலந்துகொண்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுவையான, தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் நலச்சங்க உறுப்பினர்கள், திரு இருதய நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026 கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2026

கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார் 

தூத்துக்குடி, ஆக.20:

தூத்துக்குடியில் AICCI National Startup Summit 2026 தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டின் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

thoothukudileaks


விழாவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித், IRSME மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



thoothukudileaks


தேசிய அளவில் தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.



AICCI தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதுடன், இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



AICCI தலைவர் சங்கர் மாரிமுத்து, AICCI செயலாளர் சுரேஷ் குமார், நேசுரல்ஸ் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!


மாநாட்டை ஏற்பாடு செய்யும் குழுவில் சங்கர் மாரிமுத்து, டேவிட் ராஜா, ஜூட்ஸ் பரஞ்சோதி, பின்டோ வில்லவராயர், சுரேஷ் குமார், ஜோ பிரகாஷ், விக்னேஸ்வரன், தினேஷ் கந்தசாமி, ஜோசப் காஸ்கரினோ, பிரேம் பால், பொன்குமரன், தனுஷ் கார்த்திக், பிரேம் வெட்டி, சிசில் மச்சாடோ, மகாலிங்கம், விஸாகேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.




மாவீரன் ஒண்டிவீரன் 255 வது நினைவு நாள் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் வீரவணக்கம்!

மாவீரன் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள்: தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் வீரவணக்கம்!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 20

ஆங்கிலேயரின் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 20) தமிழகம் முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இதையொட்டி, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.




நிகழ்ச்சியில் மாவீரன் ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.





வரலாற்றுச் சாதனை: பாளையக்காரர் பூலித்தேவனின் படையில் தளபதியாகவும் முக்கிய வீரராகவும் விளங்கிய ஒண்டிவீரன், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆரம்பகால விடுதலைப் போராட்டங்களில் ஈடிணையற்ற துணிச்சலுடன் பங்கேற்றவர். எதிரிகளின் முகாமிற்குள் தனியாகச் சென்று அவர்களின் ஆயுதப் படைப் பிரிவை அழித்து, தனது வீரத்தால் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தவர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

தலைமுறைகள் கடந்து போற்றப்படும் தியாகம்: நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய மாவீரன் ஒண்டிவீரனின் வீரத்தையும் தியாகத்தையும் இன்றைய இளைய தலைமுறையினர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி அவரது நினைவு நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நினைவு நாளையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பச்சேரியில் அமைந்துள்ள அவரது முதன்மை நினைவிடத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களும், அரசியல் இயக்கத்தினரும் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


விடுதலைப் போராட்ட களத்தில் தன் இரத்தத்தைச் சிந்தி தியாகம் செய்த மாவீரன் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாளில் அவரது புகழையும் தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்துவோம்!

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு தூத்துக்குடியில் பிரம்மாண்ட நிகழ்வு!


மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு தூத்துக்குடியில் பிரம்மாண்ட நிகழ்வு!

தூத்துக்குடி, ஆக. 19: தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று (19.08.2026) மாலை 6 மணியளவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தங்களை இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks


முஸ்லிம் லீக் நிர்வாகிகள் திரளாக இணைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி இயக்கத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்து முடிவெடுத்தது. இந்த முடிவால் எழுந்த கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பும் அசௌகரியமும் நிலவி வந்தது.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கட்சியின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிலிருந்து விலகினர்.

thoothukudileaks


இன்று மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், அவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்தனர். 


புதிய உறுப்பினர்களுக்குக் கழகச் சால்வை அணிவித்து, திமுகவின் கொள்கைப் பாதையில் உறுதியோடு பயணிக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!


தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!

395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம் — வீடுகளுக்கே சென்று பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, இ.ஆ.ப.  உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர தூய்மைப் பணிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம்:

கடந்த 16.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெரு பகுதியில் தீவிர கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் உள்ள 132 குடியிருப்பு வீடுகள், 11 காலி மனைகள் (Vacant Land) மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


இப்பணியின் போது:

  • பிளாஸ்டிக் பாட்டில்கள் & ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள்
  • தேங்காய் ஓடுகள் (சிரட்டைகள்), இளநீர் கூடுகள்
  • பழைய சைக்கிள் & இருசக்கர வாகன டயர்கள்
  • பாக்கு மட்டை தட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்
  • பெயிண்ட் டப்பாக்கள், வண்ணப்பூச்சு பாட்டில்கள், ஆயில் கேன்கள்
  • பழைய காலணிகள், பிரியாணி & சால்னா டப்பாக்கள்

ஆகிய கொசு உற்பத்தி காரணிகள் (Source Reduction) கண்டறியப்பட்டு 395 கிலோ அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


குடிநீர் பரிசோதனை & புகையடிக்கும் பணி:

மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு மண்டலப் பகுதிகளில் 'Indoor / Outdoor Fogging' (புகையடிக்கும் பணி) தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை:

17.08.2026 அன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் பி.எம்.என்.டி காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேரில் சென்று வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் கோரிக்கை: "இந்த கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." — . சி. பிரியங்கா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்.

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடைபெற்றது!

தூத்துக்குடி, ஆக. 17:

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி அமைந்தகரை தொழிற்கூடக் கட்டிடத்தில் நேற்று (16.08.2026, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது. 

thoothukudileaks


கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி  R. சங்கீதாரமேஷ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர்  இரா. மாடசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்கள்:

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக:

 தமிழ்நாடு அகத்தியர் சங்க மாவட்டத் தலைவர் M. ராஜ்

 ஓய்வுபெற்ற கான்வென்ட் பள்ளி ஆசிரியை  தேவகி

 மின்னல் அம்ஜித்

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க நிர்வாகிகள் உரை:

கூட்டத்தில் சங்கச் செயலாளர்  வேளாங்கண்ணி, துணைத் தலைவர்கள்  M. பொன்னி, J. நிர்மலா மற்றும் இணைச் செயலாளர்  N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

thoothukudileaks


இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

 

சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை குறித்து தூத்துக்குடியில் PUCL கருத்தரங்கு

தூத்துக்குடி: ஆக 16

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் (Peoples Union of Civil Liberties – PUCL) சார்பில், “சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை?” மற்றும் “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு?” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.

thoothukudileaks


thoothukudileaks


கருத்தரங்கிற்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் தலைமை வகித்தார்.


 மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாநிலக் குழு உறுப்பினருமான பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் பிரிட்டோ கலந்து கொண்டு, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து விரிவாக கருத்துரையாற்றினார்


thoothukudileaks



PUCL மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான  ராஜா வரவேற்புரையாற்றினார்.


கருத்தரங்கில் ...

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான முக்கியமான சட்ட விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்!!!

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ பதிலளித்து விளக்கமளித்தார். 


thoothukudileaks


இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பங்கேற்பாளர்களிடையே ஏற்படுத்தப்பட்டது.

மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு

நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோ அவருக்கு PUCL தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முனைவர் X.D. செல்வராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினர்.

நன்றி தெரிவிப்பு!!!

கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் PUCL மாவட்டச் செயலாளர் தெர்மல் ராஜா நன்றி தெரிவித்தார்.

thoothukudileaks


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா

 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 80வது சுதந்திர தின விழா


தூத்துக்குடி: ஆக 15 தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் வடக்கு மண்டல உதவி ஆணையர் எம். முனீரு அகமது, சுகாதார அலுவலர் ராஜசேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, அந்தோணி மார்சிலின், நாகேஸ்வரி, பவானி மார்சல், ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, வடக்கு மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களை பாராட்டும் வகையில், வடக்கு மண்டலத் தலைவர் தொ. நிர்மல் ராஜ் மற்றும் உதவி ஆணையர் எம். முனீரு அகமது ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


முன்னதாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்

தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழா மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார்


தூத்துக்குடி: ஆக 15 

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

thoothukudileaks


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நற்சான்றிதழ்களை வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தது, அவர்களிடையே மேலும் சிறப்பாக பணியாற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.