தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடைபெற்றது!
தூத்துக்குடி, ஆக. 17:
தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி அமைந்தகரை தொழிற்கூடக் கட்டிடத்தில் நேற்று (16.08.2026, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவி R. சங்கீதாரமேஷ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் இரா. மாடசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்கள்:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக:
தமிழ்நாடு அகத்தியர் சங்க மாவட்டத் தலைவர் M. ராஜ்
ஓய்வுபெற்ற கான்வென்ட் பள்ளி ஆசிரியை தேவகி
மின்னல் அம்ஜித்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சங்க நிர்வாகிகள் உரை:
கூட்டத்தில் சங்கச் செயலாளர் வேளாங்கண்ணி, துணைத் தலைவர்கள் M. பொன்னி, J. நிர்மலா மற்றும் இணைச் செயலாளர் N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக