திங்கள், 17 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!


தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்!

395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம் — வீடுகளுக்கே சென்று பரிசோதிக்க மருத்துவ குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் மற்றும் தீவிர காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்கா, இ.ஆ.ப.  உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர தூய்மைப் பணிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


395 கிலோ கொசு உற்பத்தி கழிவுகள் அகற்றம்:

கடந்த 16.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 18 (பிரிவு 12)-ல் உள்ள ராஜகோபால் 10-வது தெரு பகுதியில் தீவிர கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அப்பகுதியில் உள்ள 132 குடியிருப்பு வீடுகள், 11 காலி மனைகள் (Vacant Land) மற்றும் அதைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

thoothukudileaks


இப்பணியின் போது:

  • பிளாஸ்டிக் பாட்டில்கள் & ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள்
  • தேங்காய் ஓடுகள் (சிரட்டைகள்), இளநீர் கூடுகள்
  • பழைய சைக்கிள் & இருசக்கர வாகன டயர்கள்
  • பாக்கு மட்டை தட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்
  • பெயிண்ட் டப்பாக்கள், வண்ணப்பூச்சு பாட்டில்கள், ஆயில் கேன்கள்
  • பழைய காலணிகள், பிரியாணி & சால்னா டப்பாக்கள்

ஆகிய கொசு உற்பத்தி காரணிகள் (Source Reduction) கண்டறியப்பட்டு 395 கிலோ அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


குடிநீர் பரிசோதனை & புகையடிக்கும் பணி:

மாநகரப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கு மண்டலப் பகுதிகளில் 'Indoor / Outdoor Fogging' (புகையடிக்கும் பணி) தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

thoothukudileaks


வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை:

17.08.2026 அன்று ராஜகோபால் நகர் 10-வது தெருவில் பி.எம்.என்.டி காலனி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேரில் சென்று வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் கோரிக்கை: "இந்த கொசுப்புழு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்புப் பணிகள் மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது. எனவே, ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." — . சி. பிரியங்கா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக