தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!
தூத்துக்குடி (ஆக. 25):
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், கேப்டனுமான விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மாவட்டத்தில் பட்டாசு வெடித்துக் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு மற்றும் இலவச அரிசி வேட்டி சேலை நலத் திட்டங்கள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள்:
தூத்துக்குடி போல்டன்புரம்: மாவட்டத் துணைச் செயலாளர் லிவிங்ஸ்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச அரிசி பைகள் மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி அண்ணா நகர்: பகுதிச் செயலாளர் வல்லரசு ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள், அரிசி பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட்: பகுதிச் செயலாளர் நாராயண மூர்த்தி ஏற்பாட்டில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக