ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 டிசம்பர், 2022

5782 பத்திரிகை அடையாள அட்டைகள் கேள்விகுறி?திணறல்!!தமிழக செய்தித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர்அவசர வேண்டுகோள்!

 தமிழகத்தில்   5782 பத்திரிகை அடையாள அட்டைகள் கேள்விகுறி?திணறல்!!தமிழக செய்தித் துறை அமைச்சருக்கு மு.சிவதமிழவன்,(மாநில தலைவர்) தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் - All India News paper Employes Federation - New Delhi

அவசர வேண்டுகோள் வைத்து உள்ளார்

இதுபற்றிய செய்தியாவது:-

மு.சிவதமிழவன்(மாநிலதலைவர்)


PRESS MATTER -URGENT

...........................

பெறுநர் :-

மாண்புமிகு திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்,

தமிழக செய்தித் துறை அமைச்சர், 

தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009


மாண்புமிகு அமைச்சர் அய்யா,

வணக்கம்.2023 ஆம் ஆண்டு செய்தித் துறை மூலம் செய்தியாளர் அடையாள அட்டை வழங்குவதற்கு புதிய 10 கடும் நிபந்தனைகளை விதித்து டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க உத்திரவிட்டுள்ளது செய்தித் துறை .


  ஆனால், இவ்வருடம் விதித்துள்ள வங்கி மூலம் சம்பள விபரம், 3 வருட பத்திரிகை தணிக்கை கணக்கு சான்று ஆகிய இரண்டு நிபந்தனையால் 5782 பத்திரிகை அடையாள அட்டைகள் பெற்ற புதுப்பித்தலுக்கு முயலும் 20 சதவீதம் பேர் கூட செய்தித் துறையிடம் சமர்பிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

இந்த கடும் நிலைமையை செய்தி துறை அமைச்சர் பெருமான் ஆகிய தாங்கள் தான் இந்த உண்மையான  - பத்திரிகையாளர்களை காப்பாற்ற சில தளர்வுகளை உடன் அறிவிக்க வேண்டும்.

அதாவது, தணிக்கையாளர் சான்றுக்கு பதிலாக - ஒவ்வொரு பத்திரிகைக்கும்  RNI நிறுவனம் மூலம் அந்தந்த ஆண்டு அல்லது தற்போது வரை 3 ஆண்டுகளுக்கு e -filing செய்துள்ள4 பக்க RNI அலுவலக வருடாந்திர இ-- பைலிங் நகல் இணைதால் போதுமானது என்ற உத்திரவை செய்தித்துறையும் - செய்தித் துறை அமைச்சகமும் அறிவித்து உண்மையான தமிழக பத்திரிகை, ஊடக துறையை காப்பாற்ற வேண்டுமாய் அனைத்து உண்மையான  பத்திரிகைச் சங்கங்கள் - அனைத்து உண்மையான பத்திரிகையாளர்கள் சார்பில் வணக்கத்துடன் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

(ஒப்பம்)

- மு.சிவதமிழவன்,

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் - All India News paper Employes Federation - New Delhi

mobile: 9380099819


"இணைப்பு - சட்டம் ஒழுங்கு, புதுவைதேசம் பத்திரிகைகளின் RNI  அலுவலக e-பைலிங் சான்று.

 

தேதி ..12.12.2022.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தூத்துக்குடியில் டிசம்பர் -12 மனு கொடுக்கும் போராட்டம் தொடர்பாக அறிவிப்பு டிசம்பர் -12 திங்கள்கிழமை அன்று மனு கொடுக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர், அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்வது என முடிவு. பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்

   thoothukudileaks 11-12-2022

தூத்துக்குடி மாவட்டம்ஆட்சியரிடம்  மீண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த தூத்துக்குடி மக்கள் டிசம்பர் -12 மனு கொடுக்கும் போராட்டம் .செய்ய போவதாக அறிவித்து இருந்தார் கள் .

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது .



இதுபற்றிய செய்தியாவது:-


நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வரும் 12-12-22 (திங்கள்கிழமை) அன்று ஆட்சியர் வழியாக மனு கொடுப்பதற்கு   மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.


அதன் பின்னர் மாண்புமிகு  கனிமொழி MP அவர் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்திக்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் கடந்த 29-11-22 அன்றும், அதே போல மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் 07-12-12 மற்றும் 09-12-22 அன்றும் பல்வேறு கிராம, மாநகர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. 


அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல்  வழக்கு வரும் ஜனவரி 17ஆம் தேதி விசாரணைக்கு வருகிறதென்றும், அந்த வழக்கிற்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியாக போராடி ஸ்டெர்லைட்டை மீண்டும் வரவிடாமல் தடுப்போம் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் எனவும், இதனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம், நிர்வாகிகள் / பிரதிநிதிகள் மட்டும் 12-12-22  அன்று மனு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


அதன் பின்னர் 08-12-22 அன்று அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து பேசி, அரசு தரப்பின் கோரிக்கை குறித்தும், ஜனவரி 17ல் உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரும் வழக்கு மற்றும் நிலவும் சூழல்கள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. 



 மாண்புமிகு. திருமதி கனிமொழி MP மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவரின் உறுதிமொழியை பரிசீலித்த பின்னர் டிசம்பர் -12 திங்கள்கிழமை அன்று மனு கொடுக்க செல்வதென்றும், பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர், அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்வது என முடிவு செய்யப்பட்டது.


ஒரு வேளை நமது கோரிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைவேற்றப்படவில்லை என்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நாம் கலந்தாலோசனை செய்து அதற்கடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


டிசம்பர்-12 போராட்டத்திற்கு முழு அளவில் தயாராகி வந்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


எனவே மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து ஆதரவும், ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்.

சனி, 4 ஜூன், 2022

தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி வராமல் தடுப்பது யார்?தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் கேள்வி? தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் தலைநகரமான தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படவில்லை.? தூத்துக்குடி பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்றாக  இருந்து வருகிறது. 

இந்த (2022 )ஆண்டாவது தூத்துக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க  வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழன்டா இயக்க மாநில தலைவர் ஜெகஜீவன்


   இதுகுறித்து தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; 


 தூத்துக்குடி மாநகரம் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநகராட்சியாக உருவானது. 

மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 4.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 

கல்வி அறிவில் மாநிலத்தில் முதல் 5 இடங்களில் தூத்துக்குடி இடம்பெற்றுள்ளது.

           இங்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளது. அரசு மருத்துவக்கல்லுரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. 


இங்கு 4 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இருந்து வருகிறது.ஆனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டும் இல்லை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் இருக்கின்றது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 800 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.


 இந்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு அரசுக் கல்லூரி கிடையாது அரசு கல்லூரி என்று சொன்னால் குறைந்த கல்வி கட்டணம்  மட்டுமே ஆனால் இன்று தூத்துக்குடியில் சுயநிதிக் கல்லூரிகள் பெருகிவிட்டது இந்த கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் 20 ஆயிரம் வரை கல்வி கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது ஆனால் இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள எந்த கட்சி அரசியல்வாதியும் வாய்திறக்க மறுக்கிறார்கள். குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் அமைதியாக இருந்து  அவர்களுடைய சொந்த கல்வி சாலைகள் பெருகவேண்டும் என்பதற்காக ஏழை மாணவர்கள் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

             கடந்த சில ஆண்டுகளாகவே கலைக்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதி என்பதாலும், அதிகம் படித்தவர்கள் உள்ள நகரமாக இருப்பதாலும் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.

          மேலும் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. 


தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் தலைநகரமான தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். 2022 இந்த ஆண்டாவது தூத்துக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திங்கள், 30 மே, 2022

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வழங்கிட. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்ட குழுவின் நடத்திய‌ முற்றுகை போராட்டம்

2022 மே 31 இன்று எங்கே எனது வேலை

தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி யில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி  தந்திஅலுவலகம் முன்  முற்றுகை போராாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசே!
தமிழக அரசே!
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு
90% வழங்கிடு.

தமிழ்நாடு அரசு பணியிடங்களை தமிழக இளைஞர்களுக்கே முழுமையாக
வழங்கிடு.
ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக
நிரப்பிடு.
பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு BNEGA சட்டத்தை நிறைவேற்றிடு
ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை
மீண்டும் 58 ஆக மாற்றிடு.

தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் நிறைவேற்றிடு.
தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங் முறையை தவிர்த்து பணி நியமனங்களை
நிரந்தரமாக்கிடு.

சிறு மற்றும் குறுந்தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா
கடன் வழங்கிடு



பெண்களுக்கு சமவேலைக்கு சம ஊதியத்தை உத்திரவாதப்படுத்திடு.


வேலையில்லாக் காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வூதியம் வழங்கிடு.

மேற்குறிய கோஷங்கள் எழுப்பினர்.

இன்று நடைபெற்ற முற்றுகைபோராட்டத்தில்...

தோழர்.பெ. சந்தனசேகர் வழக்கறிஞர், AIYF மாவட்ட செயலாளர்
P.சீனிவாசன் வழக்கறிஞர், மாநிலகுழு உறுப்பினர்
M. மணிகண்டன் மாவட்டத்தலைவர்
R.சிவராமன் மாவட்ட பொருளாளர்
V.பாலமுருகன் முன்னாள் மாநில செயலாளர்
துவக்கி வைப்பவர் :
பங்கேற்கும் தோழர்கள்
M.பெருமாள்
A.பேச்சிமுத்து
A. ராஜா சிங்
N. ராமசாமி
G.சூர்யா
ரகுராமன்
P. சேகுவேரா
R.சக்தி
S.ஐகோர்ட்
A.விக்னேஷ்
M. ராஜேஷ்
கரும்புசண்முகம்
முத்துக்குமார்
M.முத்து
M. மாரிமுத்து
Y. செல்வராஜ்
M.செண்பகமல்ராஜா வழக்கறிஞர்
R.சோலையப்பன்
V. கணேசகண்ணன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 26 மே, 2022

பரபரப்பு நேற்று முதல் சூடுபிடிக்கும் ஸ்டெர்லைட் விவகாரம் தூத்துக்குடி இளைஞர்களுக்கு சி.பி.ஐ சம்மன்

 28 லிருந்து 101 வரையான பொதுமக்களுக்கு (25-05-20222) நேற்றிலிருந்து சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் தங்கியிருந்து சம்மன் கொடுத்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக

சி.பி.ஐ.  வழக்கு சட்ட உதவிக்கு கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களை அணுகுக உதவுகிறோம் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  சட்ட ஆலோசகர் கள் தூத்துக்குடி மக்களோடு  இணைந்து எதிர்கொள்வோம் என முன்வந்து தெரிவித்துள்ளார் கள்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி இளைஞர்களுக்கு சி.பி.ஐ சம்மன் கொடுத்து வருகிறது.

சட்டஉதவி செய்யத்தயாராக உள்ளோம்.


ஏற்கனவே சி.பி.ஐ - ஆல் சம்மன்  சார்வு செய்யப்பட்ட 27 பேர் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் (CJM கோர்ட்) ஆஜராகி வருகிறார்கள்.


 இவர்கள் அனைவருக்கும் நமது மக்கள் கூட்டமைப்பு சார்பில் நமது வழக்கறிஞர்கள் சட்ட உதவி செய்துகொண்டு வருகிறார்கள்.


இந்த வழக்கில் '101 பொதுமக்களே குற்றவாளிகள்' என சிபிஐ தனது இறுதி அறிக்கையை தற்போதுதான் தாக்கல் செய்துள்ளது. 28 லிருந்து 101 வரையான பொதுமக்களுக்கு நேற்றிலிருந்து (25-05-2022)சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் தங்கியிருந்து சம்மன் கொடுத்து வருகின்றனர்

அந்த வகையில் சம்மன் வாங்கிய பொதுமக்கள் தங்களது மீதான இந்த வழக்கிற்கு சட்ட உதவிக்கு நமது கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களை அணுகவும்.


1.அரி ராகவன்

வழக்கறிஞர்

தூத்துக்குடி

கைபேசி: 94435 84049


2.வாஞ்சிநாதன்

வழக்கறிஞர்

மதுரை

கைபேசி: 98653 48163


உங்களுக்கு உதவி செய்வதற்கு எமது கூட்டமைப்பு எப்போதும் தயாராகஉள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.