thoothukudileaks 11-12-2022
தூத்துக்குடி மாவட்டம்ஆட்சியரிடம் மீண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த தூத்துக்குடி மக்கள் டிசம்பர் -12 மனு கொடுக்கும் போராட்டம் .செய்ய போவதாக அறிவித்து இருந்தார் கள் .
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது .
இதுபற்றிய செய்தியாவது:-
நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக வரும் 12-12-22 (திங்கள்கிழமை) அன்று ஆட்சியர் வழியாக மனு கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் மாண்புமிகு கனிமொழி MP அவர் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்திக்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் கடந்த 29-11-22 அன்றும், அதே போல மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் 07-12-12 மற்றும் 09-12-22 அன்றும் பல்வேறு கிராம, மாநகர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் வழக்கு வரும் ஜனவரி 17ஆம் தேதி விசாரணைக்கு வருகிறதென்றும், அந்த வழக்கிற்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியாக போராடி ஸ்டெர்லைட்டை மீண்டும் வரவிடாமல் தடுப்போம் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதிய கால அவகாசம் வேண்டும் எனவும், இதனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம், நிர்வாகிகள் / பிரதிநிதிகள் மட்டும் 12-12-22 அன்று மனு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் 08-12-22 அன்று அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து பேசி, அரசு தரப்பின் கோரிக்கை குறித்தும், ஜனவரி 17ல் உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வரும் வழக்கு மற்றும் நிலவும் சூழல்கள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
மாண்புமிகு. திருமதி கனிமொழி MP மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவரின் உறுதிமொழியை பரிசீலித்த பின்னர் டிசம்பர் -12 திங்கள்கிழமை அன்று மனு கொடுக்க செல்வதென்றும், பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர், அனைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
ஒரு வேளை நமது கோரிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைவேற்றப்படவில்லை என்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நாம் கலந்தாலோசனை செய்து அதற்கடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
டிசம்பர்-12 போராட்டத்திற்கு முழு அளவில் தயாராகி வந்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து ஆதரவும், ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக