சனி, 4 ஜூன், 2022

தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி வராமல் தடுப்பது யார்?தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் கேள்வி? தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் தலைநகரமான தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படவில்லை.? தூத்துக்குடி பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்றாக  இருந்து வருகிறது. 

இந்த (2022 )ஆண்டாவது தூத்துக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க  வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழன்டா இயக்க மாநில தலைவர் ஜெகஜீவன்


   இதுகுறித்து தமிழன்டா இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; 


 தூத்துக்குடி மாநகரம் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநகராட்சியாக உருவானது. 

மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 4.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 

கல்வி அறிவில் மாநிலத்தில் முதல் 5 இடங்களில் தூத்துக்குடி இடம்பெற்றுள்ளது.

           இங்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளது. அரசு மருத்துவக்கல்லுரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. 


இங்கு 4 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இருந்து வருகிறது.ஆனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டும் இல்லை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் இருக்கின்றது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 800 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.


 இந்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு அரசுக் கல்லூரி கிடையாது அரசு கல்லூரி என்று சொன்னால் குறைந்த கல்வி கட்டணம்  மட்டுமே ஆனால் இன்று தூத்துக்குடியில் சுயநிதிக் கல்லூரிகள் பெருகிவிட்டது இந்த கல்லூரிகளில் படிப்பதற்கு ரூபாய் 20 ஆயிரம் வரை கல்வி கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது ஆனால் இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள எந்த கட்சி அரசியல்வாதியும் வாய்திறக்க மறுக்கிறார்கள். குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் அமைதியாக இருந்து  அவர்களுடைய சொந்த கல்வி சாலைகள் பெருகவேண்டும் என்பதற்காக ஏழை மாணவர்கள் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

             கடந்த சில ஆண்டுகளாகவே கலைக்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதி என்பதாலும், அதிகம் படித்தவர்கள் உள்ள நகரமாக இருப்பதாலும் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.

          மேலும் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. 


தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் தலைநகரமான தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். 2022 இந்த ஆண்டாவது தூத்துக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக