தூத்துக்குடி லீக்ஸ்: 04.06.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கான ‘காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்” ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை 45 காவல்துறையினருக்கு 2 நாட்கள் ‘காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்”
முதல் நாளான இன்று (04.06.2022) இந்த பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:-
மனிதர்களின் வாழ்க்கை பயணத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரக்கூடியது.
அதை சரி சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவம் நமக்கு வேண்டும்.
பிரச்சினைகளை கண்டு பயந்து, தவறான வழிகளில் செல்லாமல், அதை தீர்ப்பதற்க்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அனுபவங்களே உங்களை சிறந்தவர்களாக மாற்றும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
முடிந்த அளவில் பிறருக்கு நன்மைகள் செய்யுங்கள். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி உங்கள் உடலை மட்டுமல்லாமல் மனதிற்கும் ஆரோக்கியமானதாகும்.
நீங்கள் ‘மாற்றத்தை உருவாக்க கூடியவர்களாக” உங்களை மாற்றிக் கொள்ள இந்த பயிற்சியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
காவல் பணி மக்களுக்கு சேவை செய்வதற்காக நமக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக கருதவேண்டும்.
அதே சமயம் நம்மையும், நமது குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள இந்த நல்வாழ்வு பயற்சியினை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மனநல மருத்துவர் டாக்டர். சிவசைலம் மற்றும் சமூக ஆர்வலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தையும், நல்வாழ்வு வாழ்வதற்கான ஆலோசனைகளையும் கூறி காவல்துறையினருக்கு பயிற்சியளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன், தூத்துக்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக