சனி, 4 ஜூன், 2022

தூத்துக்குடி 2022 ஆண்டு இதுவரை ... 110 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி லீக்ஸ்: 04.06.2022 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த (2022) ஆண்டு இதுவரை 110 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப நடவடிக்கை. எடுத்துள்ளார் கள்.

தூத்துக்குடியில் 04-06-2022 _தேதி இன்று ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.



இது பற்றிய செய்தியாவது -

தூத்துக்குடி மாவட்டத்தில் செயின் பறிப்பு, புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கடந்த 11.05.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தூத்துக்குடி ஸ்டேட்ட பாங்க் காலனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா என்பவரது மனைவி சகாய சித்ரா (52) என்பவரிடம் அவரது கழுத்தில் இருந்த 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்தனர். 


இவ்வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த  ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் லேடன் (எ) பின்லேடன் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,25,000/- மதிப்புள்ள 7 ¼ பவுன் தாலி செயின் மற்றும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.  

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் மேற்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட லேடன் (எ) பின்லேடன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அடுத்து ....

கடந்த 28.05.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் to கடம்பூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டார். 


 இவ் வழக்கில் கயத்தார் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் உச்சிமகாளி (45), கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (29) மற்றும் கயத்தார் சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் சுடலைமணி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


 அவர்களிடமிருந்து ரூபாய் 16,000/- மதிப்புள்ள 9 ½ கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 58 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 


மேற்படி இவ்வழக்கில் உச்சிமகாளி, மணிகண்டன் மற்றும் சுடலைமணி ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குபரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த  ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் 1)  லேடன் (எ) பின்லேடன், கயத்தார் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் 2) உச்சிமகாளி, கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் 3) மணிகண்டன் மற்றும் கயத்தார் சாலிவாகனார் தெருவை சேர்ந்த சிவன் மகன் 4) சுடலைமணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 



அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட 110 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக