திங்கள், 12 டிசம்பர், 2022

5782 பத்திரிகை அடையாள அட்டைகள் கேள்விகுறி?திணறல்!!தமிழக செய்தித் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர்அவசர வேண்டுகோள்!

 தமிழகத்தில்   5782 பத்திரிகை அடையாள அட்டைகள் கேள்விகுறி?திணறல்!!தமிழக செய்தித் துறை அமைச்சருக்கு மு.சிவதமிழவன்,(மாநில தலைவர்) தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் - All India News paper Employes Federation - New Delhi

அவசர வேண்டுகோள் வைத்து உள்ளார்

இதுபற்றிய செய்தியாவது:-

மு.சிவதமிழவன்(மாநிலதலைவர்)


PRESS MATTER -URGENT

...........................

பெறுநர் :-

மாண்புமிகு திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்,

தமிழக செய்தித் துறை அமைச்சர், 

தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009


மாண்புமிகு அமைச்சர் அய்யா,

வணக்கம்.2023 ஆம் ஆண்டு செய்தித் துறை மூலம் செய்தியாளர் அடையாள அட்டை வழங்குவதற்கு புதிய 10 கடும் நிபந்தனைகளை விதித்து டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் அதற்கான ஆவணங்களை சமர்பிக்க உத்திரவிட்டுள்ளது செய்தித் துறை .


  ஆனால், இவ்வருடம் விதித்துள்ள வங்கி மூலம் சம்பள விபரம், 3 வருட பத்திரிகை தணிக்கை கணக்கு சான்று ஆகிய இரண்டு நிபந்தனையால் 5782 பத்திரிகை அடையாள அட்டைகள் பெற்ற புதுப்பித்தலுக்கு முயலும் 20 சதவீதம் பேர் கூட செய்தித் துறையிடம் சமர்பிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

இந்த கடும் நிலைமையை செய்தி துறை அமைச்சர் பெருமான் ஆகிய தாங்கள் தான் இந்த உண்மையான  - பத்திரிகையாளர்களை காப்பாற்ற சில தளர்வுகளை உடன் அறிவிக்க வேண்டும்.

அதாவது, தணிக்கையாளர் சான்றுக்கு பதிலாக - ஒவ்வொரு பத்திரிகைக்கும்  RNI நிறுவனம் மூலம் அந்தந்த ஆண்டு அல்லது தற்போது வரை 3 ஆண்டுகளுக்கு e -filing செய்துள்ள4 பக்க RNI அலுவலக வருடாந்திர இ-- பைலிங் நகல் இணைதால் போதுமானது என்ற உத்திரவை செய்தித்துறையும் - செய்தித் துறை அமைச்சகமும் அறிவித்து உண்மையான தமிழக பத்திரிகை, ஊடக துறையை காப்பாற்ற வேண்டுமாய் அனைத்து உண்மையான  பத்திரிகைச் சங்கங்கள் - அனைத்து உண்மையான பத்திரிகையாளர்கள் சார்பில் வணக்கத்துடன் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

(ஒப்பம்)

- மு.சிவதமிழவன்,

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் - All India News paper Employes Federation - New Delhi

mobile: 9380099819


"இணைப்பு - சட்டம் ஒழுங்கு, புதுவைதேசம் பத்திரிகைகளின் RNI  அலுவலக e-பைலிங் சான்று.

 

தேதி ..12.12.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக