திங்கள், 12 டிசம்பர், 2022

DSF - ன் இதயம் மீன் அரவை உடனே முட வேண்டும் தருவைக்குளம் கிராம மக்கள் சுவாசிக்க முடியாமல் முச்சு திணறல் சிறு குழந்தைகளுக்கு வாந்தி பேதி, விஷக்காய்ச்சல், நுரையீரல் தொற்று, டெங்கு போன்ற காய்ச்சல் வருவதாக அதிமுக கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

thoothukudileaks 12-12-2022

news by 

Arunan reporter

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராம மக்கள் சுவாசிக்க முடியாமல் முச்சு திணறல் சிறு குழந்தைகளுக்கு வாந்தி  பேதி, விஷக்காய்ச்சல், நுரையீரல் தொற்று, டெங்கு போன்ற காய்ச்சல் வருவதாகவும் இதனால் DSF - ன் இதயம் மீன் அரவை உடனே முட வேண்டும் என 8-வதுஅதிமுக கவுன்சிலர்ஆலோசனை மரியான் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.


மனுவில் தெரிவித்திருந்தாவது:-

உயர்திரு. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அவர்கள்

வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

ஒட்டநத்தம்.

பொருள் : தருவைக்குளம் அருகில் DSF கம்பெனிக்கு சொந்தமான

இதயம் மீன்அரவை கம்பெனியிலிருந்து வெளிவரும்

துர்நாற்றத்தினால் அக்கம்பெனியை உடனடியாக

மூடக் கோரிய மனு.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் அருகில் DSF

கம்பெனிக்கு சொந்தமான இதயம் மீன்அரவை கம்பெனி உள்ளது. இதில் இருந்து

வருகின்ற துர்நாற்றம் தருவைக்குளம் கிராமத்தில் உள்ள மக்களான

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு வாந்தி

பேதி, விஷக்காய்ச்சல், நுரையீரல் தொற்று, டெங்கு போன்ற காய்ச்சல் வருகின்றது.

சமைத்து வைத்த

எங்களுக்கு

சாப்பாட்டை சாப்பிட மனமில்லாமல் நாற்றத்துடனே

காலத்தைக் கழிக்கிறோம். பலமுறை எடுத்துச் சொல்லியும் இன்றுவரை எந்தவித

நடவடிக்கையும் இந்நிறுவனம் எடுக்கவில்லை. மக்களுக்கு பேராபத்தைத் தரும் இந்த

நிறுவனம் இனிமேல் செயல்பட தாங்கள் அனுமதிக்கக் கூடாது.

மீன்

அரவைக் கழிவை கடலில் கலக்கச் செய்கிறார்கள். அருகில் உள்ள

பூங்காவிற்கு வருகைதரும் சிறுவர்களும், சுற்றுலாப்பயணிகளும் கடலில் குளிக்கும்

போது மூச்சுத்திணறியும், உடல் அரிப்பு தோல் வியாதிகளும் ஏற்படுகின்றன. அருகில்

உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி வேலை செய்யும் போது

துர்நாற்றத்தினால் மூச்சுத்திணறி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. எங்களுடைய

உயிரையும், எங்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க இந்த கம்பெனியிலிருந்து

வெளிவரும் நச்சுத் துர்நாற்றத்தின் காரணமாக மேற்படி கம்பெனியை உடனடியாக மூட

உத்தரவிடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நகல்

1. மாண்புமிகு.மா.சுப்பிரமணியன் அவர்கள்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

2. உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். தூத்துக்குடி

ஆலோசனமைரியான்

A.M.P. ALOSANAI MARIYAN

8TH WARD COUNCILOR

THARUVAIKULAM

THOOTHUKUDI.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக