வியாழன், 24 செப்டம்பர், 2026

நடத்துனர் தற்கொலை முயற்சி: கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

 

நடத்துனர் தற்கொலை முயற்சி

கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப்.24:

தூத்துக்குடி நகர பணிமனையில் பணியாற்றும் நடத்துனர் ஆறுமுகம், பணிமனை மேலாளர் சுரேஷ் தன்னை அநாகரீகமாக பேசி மிரட்டியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறி பணிமனையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக சிஐடியு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்த சம்பவம் தொடர்பாக பணிமனை மேலாளர் சுரேஷ் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் மீது போக்குவரத்துக் கழக நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன்பு 24.09.2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க உதவி செயலாளர் MK.வினோத் தலைமை வகித்தார். சிஐடியு பொதுச்செயலாளர் S.ஜோதி துவக்கவுரை ஆற்றினார்.

தூத்துக்குடி புறநகர் பணிமனை தலைவர் S.ராமசாமி, பணிமனை செயலாளர் S.சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் R.பேச்சிமுத்து, REWA மாநில சம்மேளன துணைச் செயலாளர் S.பெருமாள், சிஐடியு மண்டல தலைவர் D.காமராஜ், துணைத் தலைவர் P.குமரகுருபரன், சம்மேளன குழு உறுப்பினர்கள் N.சிவக்குமார், G.அமல்ராஜ், K.முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மேலும், துணை பொதுச்செயலாளர்கள் S.பாலகிருஷ்ணன், S.ராமசாமி, K.சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தூத்துக்குடி மாவட்ட சிஐடியு செயலாளர் R.ரசல் நிறைவுரையாற்றினார். சிஐடியு பொருளாளர் S.சங்கிலிபூதத்தான் நன்றியுரை வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் S.அந்தோணிசார்லஸ், K.சிவக்குமார், D.ஜோன்ஸ்எட்வர்ட்ஞானராஜ், S.சிவசுப்பு, K.இராமர், K.காளிதாஸ், K.மனோகரன், C.சந்திரன், V.முத்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நடத்துனர் ஆறுமுகம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக