வியாழன், 24 செப்டம்பர், 2026

முறப்பநாடு காவல் நிலையத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் எஸ்பி பிரிவு ஏட்டு மீது பரபரப்பு புகார் கஞ்சா, குட்கா, கனிமவளக் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

முறப்பநாடு காவல் நிலையத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் எஸ்பி பிரிவு ஏட்டு மீது பரபரப்பு புகார்

கஞ்சா, குட்கா, கனிமவளக் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி:செப்24

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாடு கஸ்பா அகரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கொ.பாலகிருஷ்ணன், முறப்பநாடு காவல் நிலையம் தொடர்பாக பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள புகாரில், முறப்பநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இதனைத் தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தகவல் தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முறப்பநாடு காவல் நிலையத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் sp பிரிவு ஏட்டு மாரிமுத்து மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


 சமூக விரோதிகளிடமிருந்து முறைகேடாக பணம் வசூலித்து வருவதாகவும், அதன் காரணமாக சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

தன் மீதான புகார்களால் ஆத்திரமடைந்த ஏட்டு மாரிமுத்து, சமூக விரோதிகளைத் தூண்டிவிட்டு தனக்கு எதிராக ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

thoothukudileaks
சமூக ஆர்வலர் கொ.பாலகிருஷ்ணன் 


சமூக ஆர்வலர் உயிருக்கு ஆபத்து !!!

மேலும், தனக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உயிர் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஏட்டு மாரிமுத்துவே முக்கிய காரணமாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வேண்டும் என சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியீடு 

இந்த புகார்கள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையென தெரியவரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் கொ.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் துறையின் நடைமுறைகளின்படி, ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களின் பணிக்காலம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக விதிமுறைகள் உள்ளன; காவலர்களை ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து பணியமர்த்துவது தொடர்பாகவும் காவல் நிலையான ஆணைகளில் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பு: சம்பந்தப்பட்ட காவலர் தரப்பின் விளக்கம் கிடைத்தால் அதையும் வெளியிடுகிறோம் செய்தி நெறிமுறைக்கு ஏற்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக