தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, நவம்பர் 16:
தமிழக முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த முகாம்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிமுக பாகம் முகவர்கள், அரசு சார்பில் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுடன் இணைந்து, தரவுகளை சரிபார்த்து, பெயர் சேர்த்தல்–நீக்கல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (16.11.2025), அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளிடம் பேசும்போது அவர்,
- வாக்கு அளிக்கும் தகுதி உள்ளவர்களை முழுமையாக சேர்க்க வேண்டும்,
- இரட்டை வாக்குரிமை உள்ளவர்களை நீக்க வேண்டும்,
- இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
மேலும், ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிமுக பாகம் முகவர்கள், அரசு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை கண்டறிந்து முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது,
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர்,
மேற்குப் பகுதி கழக செயலாளர் ஏ. முருகன்,
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன்,
மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம்,
மேற்குப் பகுதி கழக துணை செயலாளர் கணேசன்,
மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ்
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக