தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்திசெய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி, நவம்பர் 14:
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பிருந்தாவன் ஹோட்டல் இன்று தனது 31-வது ஆண்டு விழாவை வாடிக்கையாளர்கள் மனநிறைவுடன் கொண்டாடியது.
ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று மட்டும் நேரில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ₹30/-க்கு சிறப்பு சாப்பாடு, பார்சலுக்காக ₹60/-க்கு சிறப்பு சாப்பாடு வழங்கப்பட்டதால், காலை முதலே ஹோட்டல் முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவுப் பொதிகளை பெற்றுச் சென்றனர்.
பிருந்தாவன் ஹோட்டலின் வரலாறு – உரிமையாளர் தமிழ் செல்வன்
இந்த சிறப்பு நாளையொட்டி, பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் தமிழ் செல்வன் தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளரிடம் பேசியதாவது:
“பிருந்தாவன் ஹோட்டல் பாத்தீங்கன்னா… கிட்டத்தட்ட 31 வருஷமா தூத்துக்குடியில எங்க ஹோட்டல் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி நாங்க 1972-ல ஆத்தூர்ல ‘மணிக் ஹோட்டல்’ன்னு ஒரு சிறிய ஹோட்டல் ஆரம்பிச்சோம்.
அப்பா ஆத்தூர் மணி பொருட் காட்சியில் ஒரு சின்ன கடை வைச்சிருந்தாங்க. அந்த கடையில சாப்பிட்ட மக்கள் ‘சுவை ருசி நல்லா இருக்கு… நீங்க தூத்துக்குடி போயிட்டு பெரிய அளவுல ஹோட்டல் நடத்தினீங்கன்னா நல்லா போகும்’ன்னு என அப்பாவை பார்த்து சொன்னதால தான் நாங்க தூத்துக்குடிக்கு வந்தோம்.
தூத்துக்குடில பெரிய அளவுல ஆரம்பிச்ச முதல் ஓட்டல் ன்னா அது பிருந்தாவன் ஹோட்டல் தாங்க. பழைய அண்ணா பேருந்து நிலையம், பாலவிநாயகர் கோயில் தெருவில நாங்க தொடங்கினோம். முதல்ல எங்களுக்கு இடம் கொடுத்தது விசாகா லாஜ் முதலாளி. அவரால தான் பிருந்தாவன் ஹோட்டலோட பெயரும் புகழும் பரவ ஆரம்பிச்சது. இதுக்கு நான் அவர்கள் மீது நன்றியை தெரிவிக்கிறேன்.”
சுவையில் ஒற்றுமை – பிருந்தாவன் புகழின் காரணம்
“எங்க ஹோட்டலோட main ஸ்பெஷலான்னா,
- உணவோட சுவை,
- தரம்,
- காபி–டீல கூட நாங்க தரம் குறைக்கவே மாட்டோம்.
- உளுந்து கலி உளுந்து வடை
அதுலயும் பிருந்தாவன் சாம்பார் ரொம்பப் பிரபலம்னு எல்லாரும் சொல்வாங்க. அதுக்கே ஒரு special ingredient, ஒரு தனி recipe நாங்க use பண்றோம்.
தொடக்க காலத்துல சாப்பாடு ₹25-க்கு, ஜனதா சாப்பாடு ₹10-க்கும் குடுத்திருக்கோம். இன்று வரை அந்த தரத்தையும், அன்பையும் தான் வைக்கறோம்.”
பிருந்தாவன் ஹோட்டல் – கிளைகள் விரிவாக்கம்
தமிழ்செல்வன் தொடர்ந்து கூறினார்:
“இப்போ எங்க பிருந்தாவன் ஹோட்டல் கிளைகள்:
- ஆத்தூர்
- ஏரல்
- முக்கானி
- தூத்துக்குடி – பழைய பேருந்து நிலையம்
- தூத்துக்குடி – சிவன் கோயில்
- பானு பிருந்தாவன்
- திருநெல்வேலி
- சென்னை – ஐயப்பன் தாங்கல்
எல்லா இடங்களிலும் மக்கள் அளிக்கும் ஆதரவு தான் எங்களை வளர்க்குது. இந்த 31-வது ஆண்டு விழா நாளில் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.”
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே பிருந்தாவனின் பலம்
இன்றைய ஆண்டு விழா சாப்பாட்டு சலுகை காரணமாக, நாள் முழுவதும் கூட்டம் குறையாமல் இருந்து, வாடிக்கையாளர்கள் ‘சுவையும் தரமும் பிருந்தாவனின் அடையாளம்’ என பாராட்டியுள்ளனர்.
— தூத்துக்குடி லீக்ஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக