புதன், 4 செப்டம்பர், 2024

கப்பலோட்டிய தமிழன் ஜயா வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா.

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by Arunan journalist 

வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா.

தூத்துக்குடியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கினார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-


சுதந்திர போராட்ட வீரரும் சுதேசி கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரம் பிள்ளை  153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.


 தூத்துக்குடியில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜயா சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வை தமிழ்நாடு வ.உ.சி பேரவை நிர்வாகிகளும் அதன் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


 இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வ.உ.சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



பின் அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு, வேஷ்டி சேலை வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



 அப்போது அதிமுக மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,  மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யாலட்சுமணன், மிக்கேல் ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மெஜிலா துணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் ஜான்சன் தேவராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் டைகர் சிவா, பரிபூரண ராஜா,  சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஏகே மைதின், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், கே.கே.பி.விஜயன், நவ்சாத், மிக்கேல், பழனி, சங்கர், ஜெயக்குமார், எம்ஜிஆர் நடராஜன், கனகவேல், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக