தூத்துக்குடி லீக்ஸ் 7 - 4 - 2023
செய்தியாளர் அருணன்
மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆளுனர் ரவி -யின் நேற்றைய சர்ச்சையான பேச்சு தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது :-
தமிழக ஆளுநர் மாளிகையில் ஐ ஏ எஸ் ஜபி எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு "எண்ணி துணிக" எனும் ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலந்துரையாடல் போது..
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முழமையாக வெளிநாட்டு நிதி வந்துள்ளது.
அதில் எதிர்பாராத விதமாக ? போலீசாரால் சுட்டதில் .... அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரை விட நேர்ந்தது. அது வேதனை க்குரியது.
அங்கு போராடியவர்கள் எண்ணம் அந்த ஆலையை முட வேண்டும் என்பது தான்.
ஏன்? என்றால் அது இந்தியா வின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்ததாக கூறினார் .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு முடி விட்டனர் என்ற ஆளுநர் ரவி - ன் சர்ச்சையான பேச்சு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக முழவதும் குறிப்பாக தூத்துக்குடி பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது..
இன்று 7- 4 - 2023 காலை 11 மணியளவில் தூத்துக்குடியில்
12-வது வாசல் மையவாடி அருகே உள்ள மைதானத்தில்
தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவி யே தமிழகத்தை விட்டு வெளியேறு என கோஷம் எழுப்பினர்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக