தூத்துக்குடி மாவட்டம்: 07.04.2023
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய ரவுடி கைது - திருடப்பட்ட ரூபாய் 2,00,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.
திருச்செந்தூர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் மாதவன் (32) என்பவர் கடந்த 05.04.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை அவருக்கு சொந்தமான, திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடை முன்பு நிறுத்தியுள்ளார்.
பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது
இதுகுறித்து மாதவன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) என்பவர் மேற்படி மாதவனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
![]() |
| கைதான கார்த்திக் |
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் எதிரியான கார்த்திகை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,00,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி கார்த்திக் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 14 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக