வெள்ளி, 7 ஏப்ரல், 2023

வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடை விழாஅமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

thoothukudileaks 7-4-2023

photo news by shanmuga sunthram 

வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடை விழா அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி பாளை நெடுஞ்சாலையில் புகழ்பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது. 



கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அம்மன் தரிசனம் செய்த பின் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக