தூத்துக்குடி லீக்ஸ் 7-4-2023
செய்தியாளர் அருணன்
தமிழக ஆளுநர் ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து சர்ச்சை பேச்சு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் .
இதுபற்றி செய்தியாவது:-
தங்கள் வாழ்வுரிமைக்கு, வாழ்வாதார உரிமைக்காகவும் போராடும் சாமான்ய மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக
வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரிலோ அல்லது அரை வேக்காட்டுத்தனத்தில் இஷ்டத்துக்கு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியுள்ள ஆளுநர் ரவியை தூத்துக்குடி மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒரு பெரும் பண முதலையான தனியார் ஆலைக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம், மேற்படி ஆளுநருக்கு எப்படி வந்தது?
மேற்படி ஆளுநர்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு பெரும் முட்டுக்கட்டை. தமிழ்நாடு அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அவர்கள் தீர விசாரித்து 815 பக்க தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக நச்சுஆலை ஸ்டெர்லைட்டின் விதிமீறல்களை பட்டியலிட்டுள்ளார்கள் என்பதை படிப்பறிவு கொண்ட அனைவருக்கும் தெளிவாகும்.
கார்ப்பரேட்களிடம் கோடிகளில் வாங்கிய காசுக்கு அதிகமாக கூவும் பழக்க வழக்கங்கள் கொண்ட அரைவேக்காட்டு அரைகுறைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஆளுனர் அவருக்குரிய
வேலையை மட்டும் பார்த்தால் நலம். தேவையில்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மனநிலையோடு கீழ்தர விளையாட்டு விளையாட வேண்டாம் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
Online rummy பிரச்சனையில் அவர் நிலைப்பாட்டுக்கு பின்னணியாக இருப்பது என்ன சக்தி ?
ஆளுநரின் இந்த செயல்
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேரா.பாத்திமா பாபு
ஒருங்கிணைப்பாளர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்.
இந்நிலையில்....
ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலை குறித்தான பேச்சுக் தூத்துக்குடி கனிமொழி எம்பி கடும் கண்டனத்தை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்ட எம்.பி ஆக இருந்து வரும் கனிமொழி தனது ட்விட்டரில்...
மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன்"
- திமுக எம்.பி.கனிமொழி ட்வீட்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக