தூத்துக்குடி மாநகரில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் கல்விச் செய்திகள் மாத இதழ் சார்பாக
10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ல் சாதனை படைத்த மாணவிகளுக்கு கைக்கடிகாரம் பரிசாக வழங்கியது.
2022 அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 10 ம் வகுப்பு பி.எம்சி பள்ளி மாணவிக்கும்.+2 ல் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற செயிண்ட் தாமஸ் பள்ளி மாணவிக்கும் இன்று ரூபாய் 2000 மதிப்புள்ள டைட்டன் சொனாட்டா கைக்கடிகாரம் பரிசாக வழங்கியது.
மேலும் +2 பொதுத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட திருச்செந்தூர் காஞ்சி ஶ்ரீ சங்கரா அகாடமி மாணவிக்கும் ,10 ம் வகுப்பில் தமிழில் மாநில அளவில் முதலிடம் பெற்ற திருச்செந்தூர் காஞ்சி ஶ்ரீ சங்கரா அகாடமி மாணவிக்கும் அடுத்த வாரம் கைக்கடிகாரம் வழங்கும் விழா நடைபெற இருக்கின்றது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக