திங்கள், 11 ஜூலை, 2022

10,000/- ம்10,000/-ம் 10,000/- ம் என ஸ்டெர்லைட் ஆதரவு கோஷம் போட கிராமத்தில் ஆள் திரட்டி அழைத்து போனவர்களை ஏலம் விட்ட மடத்தூர் மக்கள்

இதுபற்றிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்து வருவதாவது...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கோஷம் போட கிராமத்தில் ஆள் திரட்டி அழைத்து போவார்களாம்? இதில் என்ன விபரம் எதற்காக போகிறோம் என்பதே தெரியாமல் பணம் தந்தாங்க என பல பெண்கள் முதாட்டி கள்  சென்றிருக்கிறரர்கள் வேனில் அழைத்து போய் அதே வேனில் இறக்கி விடுவதையும் வாரம்தோறும் கூலியாக பணம் தருகிறேன் வரனும் என கட்டாயபடுத்தி அழைத்து சென்றும் இருக்கிறார்கள் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேசுகிறார்கள் 

தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்து ள்ளது துப்பாக்கி சூட்டில் 16பேர் உயிரிழப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் இம் மண்ணில் ஒரேயடியாக அகற்றப்பட வேண்டும் எதிர்ப்பு தெரிவித்து அமைதி யாக தமிழக அரசின் மேல் நம்பிக்கை உடன் இருந்து வருகிறார்கள்.

ஆனால் நாலைந்து பேர்கள் தூண்டும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்க கலெக்டர் ஆபீஸ் க்கு வாரந்தோறும் சிலரை அழைத்து வருகின்றனர் 

இதனால் கிராமங்கள் பொதுமக்கள் கடுப்பாகி விடுகிறார்கள்.


ஏலமிடும் வீடியோ பார்க்க 


இன்று (11-07-2022) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆலையின் கைக்கூலியாய்  ஸ்டெர்லைட்டைத் திறக்க மனு கொடுக்க மதம் அமைப்பு பெயருள்ள ஒருவர் வந்ததால், பில்டப் காட்ட ஆலை தரப்பினர் ஏற்பாட்டில் பலர் மனு கொடுக்க உடன் வந்துள்ளார்கள்.

கூலியாட்கள் அட்டென்ட் பண்ணி விட்டு வழக்கம்போல் சென்று விடலாம் எனறிருந்தார்கள்.

கிளம்ப விடவில்லை? தூத்துக்குடி காவல்துறை திடீர் என வந்தவர்களை சுற்றி வளைத்து  கைது நடவடிக்கை யில் இறங்கியதும் ஷாக் அதிர்ச்சி 

இவர்களை காவல்துறை கைது செய்து, பின்னர் மடத்தூரில் உள்ள அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விவரம் தெரிந்து திரண்டு வந்த ஊர் மக்கள் ஸ்டெர்லைட் கைக்கூலிகளுக்கு மண்டபத்தை கொடுக்க முடியாது, உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

வீடியோ பார்க்க 


வீடியோ பார்க்க 


இதனால் பிரச்சனை ஏற்படுவதை அறிந்த காவல்துறை உடனடியாக போலீஸ் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.


மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டவர்களுக்கு 'எக்ஸ்ட்ரா போனஸ்' (கைது செய்யப்பட்டால் சிறப்பு ஊக்கத்தொகை கொடுக்கப்படும்) கொடுப்பதற்கு ஊருக்குள் நடமாடிய ஒரு சில மாதச்சம்பள கைக்கூலிகளையும் விரட்டியடித்துள்ளனர்.


மடத்தூர் மக்களுக்கு வாழ்த்துக்களுடன்,

நன்றிகள் என


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இவ்வாறு  தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக