தூத்துக்குடி மாவட்டம் :11.07.2022
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது - ரூபாய் 1,25,000/- மதிப்பிலான 3 சவரன் தங்க நகை மற்றும் கொள்ளையடிப்பதற்க்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
தாளமுத்துநகர் 6வது தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி நந்தினி (28) என்பவர் நேற்று (10.07.2022) இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் மேற்படி நந்தினி அணிந்திருந்த தங்க நகையை பறித்து சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து எதிரி நாகூர் மீரானை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,25,000/- மதிப்பிலான 3 சவரன் தங்க நகை மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 67 F 7803 (Hero Splendar) என்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக