பிஜேபி சார்பில் 39வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் உஷாதேவி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் அதிமுக பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில் 39வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருச்சிற்றம்பலம் என்பவர் தன் மீது உள்ள குற்ற வழக்குகளை மறைத்தும் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பிஏ படித்ததாகவும் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக பிஜேபி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் உஷாதேவி மற்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி 39வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அதிமுக பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் தன்மீது அவதூறுகளை பரப்பி வரும் பிஜேபி வேட்பாளர் மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் யூ.எஸ்.சேகர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அப்போது மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யூ.எஸ்.சேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் உஷாதேவி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் தனது அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தபோது குற்ற வழக்குகளை மறைத்து உள்ளதாகவும் மேலும் அவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பிஏ படித்ததாகவும் பிரச்சாரம் செய்தாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர் தங்கள் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர் மேலும்
தனது அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் வேட்பு மனு தாக்கலின் போது தனது குற்ற வழக்குகளை தெரிவித்த தாகவும் மேலும் காவல் துறையில் வழங்கிய நற்சான்றிதழ் குற்ற வழக்குகளை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேட்புமனு பரிசீலனை போது எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் தற்போது திட்டமிட்டு
தங்கள் மீது அவதூறு பரப்பும் பிஜேபி வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக