தூத்துக்குடி லீக்ஸ் 19.04.2022
தூத்துக்குடியில் தனியார் முதலீட்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி ரூபாய் 36,06,000/- பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் பொன்முனியசாமி (43) என்பவரிடம் மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மாசாணம் மகன் ராஜ் (41) மற்றும் முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்த நயினார் மனைவி ஜெயலட்சுமி (52) ஆகிய 3 பேரும் கடந்த 01.12.2019 அன்று அறிமுகமாகி தங்களுடைய ‘சன்மேக்ஸ்” என்னும் முதலீட்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 10 சதவீதம் லாபம் ஈட்டி தருவதாக கூறியதன் பேரில் பொன்முனியசாமி ரூபாய் 18 லட்சமும், இதே போன்று மாரிச்சாமி என்பவர் ரூபாய் 5,25,000/-மும், செல்வராஜ் என்பவர் ரூபாய் 7,35,000/-மும், சந்தனகுமார் என்பவர் ரூபாய் 84,000/-மும், குருசாமி என்பவர் ரூபாய் 3,78,000/-மும் மற்றும் ரகுராமன் என்பவர் ரூபாய் 84,000/-மும் என மொத்தம் ரூபாய் 36,06,000/- பணத்தை அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
இதனையடுத்து மேற்படி 3 எதிரிகளும் முதலீட்டு தொகைக்கு சில மாதங்கள் வரை 10 சதவீதம் லாபத்தினை மட்டும் கொடுத்துவிட்டு, பின்பு அவர்களின் முதலீட்டு தொகை நஷ்டம் அடைந்து விட்டதாகவும் முதலீட்டு பணத்தை திருப்பி தர முடியாது எனவும், பணம் கேட்டு வந்தால் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து பொன்முனியசாமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் காந்திமதி, தலைமைக் காவலர்கள் பிள்ளைமுத்து மற்றும் ஈஸ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரிகளில் ராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் இன்று (19.04.2022) கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றொரு எதிரியை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக