வெள்ளி, 22 ஏப்ரல், 2022

தூத்துக்குடி பேரூந்து நிலையத்தில் அகோரி மன நோயாளி அட்டகாசம் விரட்டி பிடித்த போலீசார் பரபரப்பு

 தூத்துக்குடியில் அதிகாலை 4 மணியளவில் இருந்து அகோரி போல் திருநீறு அணிந்து மன நோயாளி ஒருவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தில் ஏறி நின்று ரகளை செய்து கொண்டிருந்தார். மழையில் வேறு பெய்து கொண்டிருந்ததால் .. பரபரப்பு ஏற்பட்டது.

 தாமதமாக பின்பு அவரை கவனித்த வாட்ச்மேன் பார்த்து உடனடியாக விரட்டி யடித்தார்.




 உடனே அந்த மனநோயாளி  எதிரே இருந்த பழைய பேருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு கத்தியபடி ஒடினார்.


அங்கே தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் பேசிய மாணவிகளை மற்றும் பெண்கள் குழந்தைகளை கல்லால் அடித்து விரட்டிய படி  அட்டகாசம் செய்தார்


அங்கு பயணிகள் பொதுமக்கள் பயந்து அலறினார்கள். 


இதை பார்த்து இழுத்து செல்ல

ஒரு கட்டத்தில் புற நகர் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்தார் அங்குசென்று போலீசாரிடம் தகராறு செய்ததும் திடீரென மனநோயாளி பிடிக்க இயலாமல்  அருகில் இருந்த கோவில் வளாகத்தில் வேகமாக ஓடி  உள்ளே நுழைந்து பூட்டினார். 



தகவல் அறிந்து உடனடியாக மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் 

அவனை பிடிக்க முயற்சி செய்தார்.


அப்போது அகோரி தோற்றம் கொண்ட மனநோயாளி திருநீறு சிவப்பு குங்குமம் அள்ளி  பூசி கொண்டு பயங்கரமாக அருள் வந்தது போல கத்திய ஆடியபடி அங்குமிங்கும் ஒடினார்.

 அவனை காவலர்கள் அங்கு நின்ற ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோர் ஒரு வழியாக  விரட்டி பிடித்தார்கள் பின்பு தப்பவிடாமல் கட்டி ஏற்றி ஆட்டோவில் மருத்துவமனை கொண்டு சென்றார்கள்.



மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் மனநோயாளியை துரத்தி விடாமல் பிடித்ததால் அப்பகுதியில் மிகவும் பரப்பரப்பாக காணப்பட்டது.


முக்கிய குறிப்பாக இப்பகுதியில் தொடர்ந்து மன நோயாளிகள் அதிகமாக நடமாட்டம் பொது மக்களை இடையூறு ஏற்படுத்தி வருவதும் ..சில வேளைகளில் உள் நுழையும் பஸ் முன் மறித்து டான்ஸ் ஆடும் மனநோயாளிகள் தொல்லை தொடர்கதையாகியுள்ளது. காவல்துறை சமூக சேவையாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக