மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே !
வணக்கம்.
வாழ்த்துக்களுடன் !!
தூத்துக்குடி மாநகராட்சியை மதசார்பற்ற திமுக கைபற்றியவுடன் பொது மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த வணிகர்களும் மிகவும் ஆனந்தம் அடைந்தோம்.
ஆனால் அடுத்தடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் அராஜகப் போக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மனவேதனை அடையச் செய்கிறது.
அதிகாரிகளின் அடாவடி செயல்கள் :
1 ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிகர்களை பழிவாங்குதல்
2 வாடகை வசூல் என்று கூறி 31 மார்ச் 2022 வரையான மாத வாடகையை மாதம் முடியும் முன்பு வசூலிக்க நடவடிக்கை எடுப்பது மட்டும் அல்ல, மார்ச் 31 வரையான கட்டணம் செலுத்தாவிடில் கடைக்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டுவது, கடை உரிமையாளரை கடைக்குள் உள்ளே வைத்து ஷட்டரை அடைப்பது போன்ற அடாவடி வேலையில் ஈடுபடுகிறார்கள்.
3. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு நம்பர் 01 முதல்வர் என்று பெயர் வாங்கிய முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பொதுமக்களிடம் அடாவடியாக சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, வாடகை, வீட்டு வரி, கழிவு நீர் அகற்ற வரி, இதர வரிகள் வசூலித்து பொதுமக்களை பெரும் அவதிக்குள் ஆக்குகிறார்கள்.
அறிவுப்பு ஏதும் கொடுக்காமல் காலம் அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகளின் இன்றைய "ஆக்கிரமிப்பு அகற்றம்"என்ற கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோல் முன்னறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திடும் நிலை ஏற்படும்.
தங்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும், தாங்கள் எங்களின் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் மீண்டும் தங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளின் அராஜக போக்கை கைவிட வேண்டும்.
மேலும் முன் அறிவிப்பு, தகுந்த காலக்கெடு உடன் நோட்டீஸ் கொடுக்காமல் வியாபாரிகளின் உடமைகளை ஒரு திருடன் போல் ஜெயராஜ் ரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் ( 23.03.2022 )இன்றைய தினம் தூக்கிச் சென்றதை மீண்டும் அதே வணிகர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்திட வேண்டுகிறோம்.
இப்படிக்கு
சொ.ராஜா B.A.,L.L.B.,
மாநில அமைப்பாளர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை(இ) 9843412669
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக