வியாழன், 24 மார்ச், 2022

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டீ குடிக்க வந்த கஞ்சா வியாபாரி படுபயங்கரமாக வெட்டி கொலை மர்ம கும்பல் தப்பியோட்டம் பரபரப்பு

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டீ குடிக்க வந்த கஞ்சா வியாபாரி   வெட்டி படு கொலை பைக் - ல மர்ம கும்பல் தப்பியோடினார்.

தூத்துக்குடி புது பஸ் ஸாமாண்டில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது


இன்று 24-03-20 22 மாலை  தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மதுரை செல்லும் வழி தடத்தில் பஸ்-க்காக  அருகில் உள்ள டீ கடை முன்பு டீ மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டு காத்திருப்பார்கள். அதே போல் அருகிலே கொஞ்சம் தள்ளி போனால் பத்திர பதிவு அலுவலகம் இருப்பதால் சொத்து பதிவு மாலை முடித்து விட்டு பேருந்து நிலைய உள்பகுதியில் நில புரோக்கர்கள் இருப்பது வழக்கமாக உள்ளதால் மாலை நேரம் பரபரப்பாகவும் கூட்டம் இருக்கும் பிச்சையெடுக்கும் சிறுகுழந்தைகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் திருநங்கைகள் மற்றும் சிலர் பொழுது போகாமல் அங்கே சுற்றி கொண்டிருப்பார்கள். இவர்களை காவல்துறையினர் கண்டு கொள்ள மாட்டார்கள்

பாத்ரூம் அடுத்துள்ள உள்ள டீ கடை அருகே டீ குடிக்க வந்த தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்தவர் நெல்லையப்பன். இவருடைய மகன் முத்துப்பாண்டி(வயது 45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை அருகே நின்ற போது ...

அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக முத்து பாண்டியை வெட்டி சாய்த்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் தீடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் பாத்ரூம் அடுத்து தான் பேரூந்து நிலைய போலீஸ் பூத் காவல் நிலையம் இருக்கிறது.. 

இதனால் தூத்துக்குடி காவல்துறை கொலையாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுத்து விசாரனை செய்து வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக