புதன், 1 டிசம்பர், 2021

தூத்துக்குடி மாநகராட்சி வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் ரத்து செய்து ரூ 3000 வழங்க வேண்டும் தமிழ்நாடு வ உ சி எழுச்சி பேரவை பரபரப்பு!!!!

 தூத்துக்குடி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடி மாநகராட்சிமற்றும் ஊரக முக்கிய பகுதிகள் முழுவ தும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். 



நிரந்தர தீர்வு பற்றி சிந்திக்காமல், வருடாவருடம் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதிகளில் தண்ணீர் தேங்குவதும், அதனை மின்மோட்டார் மற்றும் அப்பகுதியில் தற்காலிகமாக ரோட்டை உடைத்து வடிகால் அமைப்பது, நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் அப்பகுதியில் தார் சாலை அமைப்பது வழக்கமாக்கி கொண்டுள்ளன.


தூத்துக்குடிமாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்பாடு 5 நாட்களாகியும் இந்த முறை அதுவும் சரிவர செய்யாமல் திணறிக் கொண்டிருக்கிறது .

மாநகராட்சியில் பலதரப்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் இருந்தும்கூட இந்த சூழ்நிலையை கையாளத் தெரியாமல் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் திணறிக் கொண்டிருக்கிறது. 


 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு உடனடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்களோடு, ரூ 3..000 வழங்கிட வேண்டும் மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மின் கட்டணம் , வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் ரத்து செய்திடதமிழ்நாடு வ உ சி எழுச்சி பேரவை சார்பாக கோரிக்கை வைக்கிறோம். 

 M. தமிழ்ச்செல்வன் நிறுவனர்.. தமிழ்நாடு வ உ சி எழுச்சி பேரவை. P. சந்தன மாரியப்பன். மாநில ஒருங்கிணைப்பாளர். பொன்லட்சுமணன். மாவட்ட தலைவர். M. முத்துக்குமார் மாவட்ட செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக