தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மாவட்ட ஆயுதப்படை போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய செய்தியாவது...
நேற்று (29.11.2021) தூத்துக்குடி.. மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 வயதுடைய பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது...அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் மேற்படி அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த பெண் சத்தம்போடவே அந்த மர்மநபர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பெண்ணிடம் தங்க செயின் பறித்து சென்றவரை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட (பொறுப்பு) சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் முத்துவீரப்பன், பாண்டியன் மற்றும் காவலர் ஜெயகோபால் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி செயின்பறிப்பில் ஈடுபட்டவர் முத்துகுமார் (27), த/பெ. ஆறுமுகபெருமாள், பொட்டாலூரணி, புதுக்கோட்டை என்பதும், அவர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் முத்துகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக