லஞ்சம் வாங்குவதோ, கொடுப்பதோ குற்றமாகும் என்பதால் தமிழக அரசு லஞ்சத்தை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாரம் (26.10.2021 முதல் 01.11.2021 வரை) முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது.
இன்று (26.10.2021) தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . கார்த்திகேயன் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான்கறிவேன்.
எனவே நான், ’அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்.....
அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் .....
ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்த உறுதி மொழியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் காமராஜ், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா,
சங்கரன், சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன்,. மாரியப்பன்,மாரிமுத்து, ராபர்ட், சரஸ்வதி, அந்தோணியம்மாள், அருணாச்சலம், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக