அதிமுக கட்சிக்காக உழைக்கும், பணியாற்றும், தலைமை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளையே மிக தர குறைவாக கேவலமா பேசி வரும் தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு உடன் நீக்க வேண்டும் என அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பஞ்சாயத்து துணை தலைவர் சரவணவேல் வலியுறுத்தி உள்ளார் .
S.R.B.சரவணவேல் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பஞ்சாயத்து துணை தலைவர் |
மேலும் அதிமுக கட்சிக்கு துரோகம் செய்த பெருங்குளம் ஆ.செல்லதுரை என்பவரை கட்சியை விட்டு நீக்கம் செய்துவிட்டார்கள் தற்போது அவரை அதிமுக மேடையில் வைத்து தூத்துக்குடியில் அதிமுக கட்சி கூட்டம் நடத்தலாமா? இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என என்றும் அம்மாவின்உண்மைத்தொண்டன் என சரவண வேல் தெரிவித்தாவது:-
கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கழகம் அமைப்பு ரீதியாக செயல்படும் பிற மாநிலங்கள் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கழகத்திற்காக கழகம் தோற்றுவித்த நாள் முதல் இன்றுவரை தன்னிலை மாறாது, தடம் மாறாது, கழகத்தின் நலனே குறிக்கோளாய் கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் கழக முன்னோடிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என அனைத்து திறமைமிக்க கழக சொந்தங்களுக்கு, ரத்தத்தின் ரத்தங்களுக்கு கழக பொன்விழா ஆண்டில் நினைவு பதக்கம், பொற்கிழி மற்றும் ஊக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கும் இந்த பொன்னான நேரத்தில்,
கழக ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களே!
கழக இணை ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களே!
கழக பொன்விழாவை மேலும் சிறப்பித்திடும் வகையில் கழக நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் பரிசீலனை செய்து, இந்தப் பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்து தொண்டனுக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு இந்த பேரியக்கத்தில் என பெருமை சேர்த்த தங்கள் இருவருக்கும் என் பாதம் பணிந்த வணக்கங்கள், நன்றிகள்! அனைவருக்கும் நன்மை பயக்கும் தங்கள் அறிவிப்புகளால் கழகத்தின் மூத்த முன்னோடிகள் முதல் தற்போது கழகத்தில் பணியாற்றி வரும் இளைஞர்கள் வரை பெருமிதம் கொண்டுள்ளனர்.
அதே சமயத்தில் நீங்கள் வழங்கும் அந்த வெகுமதிகள் கழகத்திற்கும் கழக தலைமைக்கும் விசுவாசமாக பணியாற்றிய தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே என் போன்ற தொண்டனின் ஆவல்.
அந்தவகையில் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் வெகுமதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ள தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி-க்கு மட்டும் வழங்கக் கூடாது என்ற ஆட்சேபனையை பணிந்து தெரிவிக்கிறேன்.
காரணம், இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிழைப்புக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வந்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்னார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.
ஆனால் இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை கருணாநிதி அவருக்கு கழகம் தலைமை கழக பேச்சாளர் என்ற கழகத்தின் கொள்கையை நிலை நாட்டும் பெருமைக்குரிய பதவியை வழங்கி சிறப்பு செய்தது. ஆனால் பதவியைப் பெற்ற தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி அவர் கழகத்திற்கு என்ன செய்தார்.
ஒரு முறையாவது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் நடைபெற்ற அரங்கக் கூட்டங்களிலும் ஒரு முறையாவது கழகத்தின் கொள்கைகளை, கழகத் தலைமையின் பணிகளை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக கழக ஆட்சி செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்தது உண்டா? இல்லை திமுகவிற்கு எதிராக ஏதாவது பேசியதுண்டா?
இவர் தூத்துக்குடியில் தனது சுயலாபத்திற்காக ஒவ்வெரு முறையும் ஒருவருடன் சேர்ந்து மற்றொருவரை மேடைகளில், அரங்கங்களில் கழக நிர்வாகிகளை அநாகரிகமாக பேசும் வழக்கத்தைக் கொண்ட பேச்சாளர். தன்னை அறிவிக்கப்படாத நட்சத்திரப் பேச்சாளராக கூறிக் கொண்டு, மற்றொருவரை தரக்குறைவாக இழிவாகப் பேசுவர். உதாரணம் கட்சிக்காக உழைக்கும், பணியாற்றும், தலைமை, மாவட்ட நிர்வாகிகளையே மிக கேவலமாக சித்தரித்து கத்திக்கத்திப் பேசும் பேச்சாளர்.
கழக நிறுவன 50வது ஆண்டு தினமான இன்று (அக்டோபர் 17) பொன் விழா.
மாவட்டம் முழுவதும் மாவட்ட கழக செயலாளர் பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் பக்கேற்று நம் இரு பெரும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கழகத்தின் கொள்கையை, ஈகையை எதிர் கட்சி நேரத்திலும் மக்களிடத்தில் பறைசாற்றி வருகிறார்.
அதே தருணத்தில் கழக நிறுவனதினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியன் அவரது அலுவலகத்தில் ஆண்டு விழா என்ற பெயரில் கூட்டம் ஏற்பாடு செய்து..... அதில் பேசிய தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி கழகத்தை நிறுவிய புரட்சித்தலைவரை பற்றி பேசவில்லை, வளர்த்த அம்மா அவர்களை பற்றி பேசவில்லை, தற்போது வழி நடத்தி வரும் தலைவர்களை பற்றி பேசவில்லை, கழகத்தின் கொள்கையை விளக்கிப் பேசவில்லை ஏன் தற்போது நடைபெறும் திமுக அராஜக அரசியலை பற்றி பேசவில்லை மாறாக தன் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளரை ஒருமையில் பேசுகிறார் தன் சுயலாபத்திற்காக. நமது கட்சியைச் சார்ந்த வட்ட செயலாளர்களை தரம் தாழ்த்திப் பேசுகிறார்.
மாவட்ட நிர்வாகியை உயிரோடு இருக்கமாட்டான் என்று மிரட்டுகிறார். இப்படி கட்சி நிர்வாகிகளையே இழிவாக பேசுவதை கேட்ட அக்கம் பக்கத்து மக்கள் இது அதிமுக கூட்டமா..? திமுகா கூட்டமா..? என்ற விமர்சனம் செய்யும் அளவிற்கு உள்ளது. இந்த பேச்சாளர் நிலை.
கழகத்தில் தலைமை கழக பேச்சாளர் என்ற ஒரு பதவி தான் இன்று வரை ஊதியம் பெற்று வருகிறது. கழகத்தில் கழக சம்பளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்கள். ஆனால் இந்தக் எஸ்டி. கருணாநிதி அவரது சுயலாபத்திற்காக அவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக நமது கட்சியைச் சார்ந்தவர்களையே அரங்கக் கூட்டங்களில் அநாகரிகமாக பேசுகிறார்.
கழகத்தின் வளர்ச்சிக்காக கட்டூரை ஏதும் எழுதாமல் நமது கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மீது குத்தூசி என்ற பெயரில் கட்டூரை எழுதி அதை அனைவருக்கும் அனுப்பிவைத்து அரசியல் பிழைப்புத் தேடும் சுயநல மனிதர். என்ன செய்தாலும் தலைமை நம் மீது நடவடிக்கை எடுத்திடவா போகுது என்ற தலைக்கணத்துடன் அவர் ஆபாசகமாக, அநாகரிகமாக, பேசிய வீடியோவை YouTubeš
gÂnt‰w« brŒJŸsd® (https://youtu.be/dBOZ2RaxU4g). பதிவேற்றம் செய்துள்ளனர் (hவவயீள://லடிரவர.நெ/னக்ஷடீஷ்2சுயஒரு4ப). எனவே கழக ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் எனது இந்த ஆட்சேபனைக் கருத்தை கருத்தில் கொண்டு இவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கி இவருக்கு இனி கட்சிப் பணத்திலிருந்து எந்த பணபயனும் கிடைக்காது செய்திட வேண்டுகிறேன்.
குறிப்பு: 1. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கழகம் பேச்சாளர்களுக்கு வழங்கிய பணத்தொகை பெற்றுக் கொண்ட தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி எந்த தொகுதியில் கழகத்திற்காக பிரச்சாரம் செய்தார் என்று அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்.
கட்சியிலிருந்து செல்லத்துரை நீக்கப்பட்டது பற்றி நமது அம்மா நாளிதழ் வந்த அறிவிப்பு செய்தி |
2. கழக ஒருங்கிணைப்பாளர்கள், நீங்கள் தேர்தல் நேரத்தில் எதிர் வேட்பாளருடன் இனைந்து கட்சிக்கு துரோகம் செய்த பெருங்குளம் ஆ.செல்லதுரை என்பவரை கட்சியை விட்டு நீக்கினீர்கள். இந்த கூட்டத்தில் அவரை உட்கார வைத்து கவுரவப்படுத்தி பேசியுள்ளனர்.
என்றும் அம்மாவின்உண்மைத்தொண்டன்
S.R.Bஷ.சரவணவேல்
முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்
பஞ்சாயத்து துணை தலைவர்
குலையன்கரிசல்
செல்:9894684757
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக