புதன், 16 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா திராவிடர்கழகம் விடுதலை சிறுத்தைகள் புரட்சி பாரதம் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கினர்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் சிறப்புச் செய்தி

தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா விமரிசை அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா இன்று (செப். 17) தூத்துக்குடியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.



thoothukudileaks
விடுதலைத்சிறுத்தைகள் 

thoothukudileaks
திராவிட கழகம் 

thoothukudileaks
திமுக 

thoothukudileaks
புரட்சி பாரதம் 


விடுதலை சிறுத்தைகள் 


தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பாக அமைந்துள்ள தந்தை பெரியாரின் ஆளுயரத் திருவுருவச் சிலைக்கு திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திமுக  விடியோ 

புரட்சி பாரதம் வீடியோ 




நிகழ்ச்சியின் நிறைவில், பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது.


 தொடர்ந்து, "எந்தக் காலத்திலும் பெரியாரின் கொள்கைகள் நிலைத்து நிற்கும்" என்பதை வலியுறுத்தி, பெரியார் சிலைக்கு முன்பாக நிர்வாகிகள் அனைவரும் உணர்ச்சிப்பூர்வமாக உறுதிமொழி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

thoothukudileaks
பெரியார் உணர்வியலார் கூட்டமைப்பு 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் 3 இளைஞர்கள் அதிரடி கைது!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே  14 கிலோ கஞ்சா பறிமுதல் 3 இளைஞர்கள் அதிரடி கைது!

தூத்துக்குடி | செப்டம்பர் 16, 2026:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

thoothukudileaks


​இத்தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  மேரி ஜெனிதா  தலைமையிலான காவல் துறையினர் உழவர் சந்தைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.


​அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 3 நபர்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.


​இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் மேரி ஜெனிதா வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட:

  • காசிபாண்டி (22), த/பெ. காளியப்பன் (கயத்தாறு, தூத்துக்குடி மாவட்டம்)
  • ராஜகோபால் (24), த/பெ. ராமச்சந்திரன் (தாழையூத்து, திருநெல்வேலி மாவட்டம்)
  • ரமேஷ் (23), த/பெ. மணி (மானூர், திருநெல்வேலி மாவட்டம்)

​ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 14 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


​இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம்

 தூத்துக்குடி, செப்.16:

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

thoothukudileaks


அன்னதானத்தை 14-வது வார்டு வட்டச் செயலாளர் காளிதுரை மற்றும் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து, நடராஜன், கண்ணன், பாலகுமார், செல்வம், கோவில் பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் மகளிரணியைச் சேர்ந்த மாரிச்செல்வி, பாக்யலட்சுமி, பூ இசக்கி, பத்மா, கனிஷா, கனிகா ஆகியோரும், இளைஞரணியைச் சேர்ந்த சிவா, விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ், தினேஷ், பிரிதிவி, சஞ்ஜித் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் பங்கேற்றனர்.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

 தூத்துக்குடி செப் 15


மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்வில் கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட பொருளாளர் சேவியர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை, பகுதி கழகச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், சுடலை மணி 

மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், நடராஜன், ஜெ.ஜெ.தனராஜ், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆண்ட்ருமணி, சுகந்தன்ஆதித்தன், சரவணபெருமாள், மனுவேல்ராஜ், கல்வி குமார், நிலா சந்திரன், சத்யாலெட்சுமணன், நவ்சாத்,

முத்துக்கணி,பரிபூரணராஜா,

முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் ராபர்ட் ஹென்றி, ஏகே மைதீன், ஐடியல் பரமசிவம், பொன்ராஜ், மிக்கேல், கே.டி.சி. ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜிலா, ராஜேஸ்வரி, தமிழரசி, அன்ன பாக்கியம், சந்திரா செல்லப்பா, மற்றும் வட்டச் செயலாளர்கள் சந்திரசேகர், சொக்கலிங்கம், கொம்பையா, ஜெயக்குமார், கேகேபி. விஜயன், சங்கர், ரெங்கன், அந்தோணிராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், பூர்ண சந்திரன், மனோகர், மாரிமுத்து, பொன்சிங், ரமேஷ்,  ரகுநாதன், கனகவேல், முருகேசன், சேவியர் ராஜ், மெத்தை ஆறுமுகம், ஒர்க் ஷாப் ரமேஷ், கணேசன், ரியாஸ், வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ஆபிரகாம், டேவிட் ராஜ்குமார், ஜெகதீஸ்வரன், தமிழரசன் வேல்சாமி செல்வராஜ் ஜெயராமன் முத்துமாலை செல்வராஜ் ப்ளம்பர் இசக்கி முத்து ஜெயபால் மாரியப்பன் ராஜதுரை எம்ஜிஆர் கணேசன் பொய்யாமொழி மகாராஜன்

மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் சிதம்பரராஜா, உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தூத்துக்குடியில் தேமுதிகவினர் மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: தூத்துக்குடியில் தேமுதிகவினர் மாலை அணிவிப்பு 

தூத்துக்குடி, செப்.15:

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தேமுதிக சார்பில் அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட மாநகர செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


இதில், பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்த தேமுதிகவினர், அவரது சமூகநீதி, எளிய மக்களுக்கான அரசியல் மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.

thoothukudileaks
video 



நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளைச்  மாவட்ட, மாநகர மற்றும் பகுதி அளவிலான அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

திங்கள், 14 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவிப்பு இனிப்பு வழங்கல்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவிப்பு 


தூத்துக்குடி, செப்.15:


பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் அருகே காய்கறி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


தென்னகத்து சாக்ரடீஸ் என போற்றப்படும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, இன்று (15.9.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, பகுதி அளவிலான அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.



பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், அவரது சமூகநீதி மற்றும் சுயமரியாதை சிந்தனைகளையும் நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா அன்னதானம் துவங்கி வைத்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடி: செப் 14,

தூத்துக்குடி போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.


விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.

சிறப்பு அன்னதானம் 

மற்றும் கலை நிகழ்ச்சி

மதிய உணவாக பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

"கடந்த 42 வருடங்களுக்கு முன் திமுகவின் முரட்டு பக்தனாக திகழ்ந்த பெரியசாமி அவரது போல் பேட்டை பகுதியில் விநாயகர் கோயில் அவரது சொந்த செலவில் உருவாக்கி  கோவில் சிறப்பாக நடத்தி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக அப் பகுதியில் நடத்தி வருவார்.

 N.பெரியசாமி (Ex.M.L.A) அவரின் நினைவாக, அவரது வழியில் வாரிசுகள் ஆன முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் அன்னதானம் துவங்கி வைத்தார் 

கோவில் தர்மகர்த்தா ராஜா .பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் .பெரியசாமி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ பலிபீட பூஜை, அலங்கார தீபாராதனை மற்றும் நெல்லை 'ரீம்ஸ்' இசைக்குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.



 இந்நிகழ்ச்சிக்கு பழரசம்  P.விநாயகமூர்த்தி தலைமை தாங்க, D.A.தெய்வநாயகம், A.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

video 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் தர்மகர்த்தா ராஜா N.பெரியசாமி தலைமையில் N.செல்லபாண்டி, ஜெகன் பெரியசாமி, A.முத்துசெல்வம், P.ரத்தினசாமி, E.பேச்சிமுத்து, P.செல்வராஜ், R.செல்வகுமார், G.வேல்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் K.நெல்லைகுமரன் சுவாமி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தார்.