கோவில்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஆகஸ்ட், 2024

கோவில்பட்டி நாடார் பள்ளியில் ரூ.1.5 கோடி மோசடி ஆசிரியர்கள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

17-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

கோவில்பட்டி நாடார் பள்ளியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1.5 கோடி ஆசிரியர்களின் பணம் மோசடி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் 


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாடார் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 


இந்த பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.


 இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர்.



 இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக, பணத்தை பெற்று அதை ஸ்டேட் பேங்க் கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.


 தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்பேரில், இதை பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் மூலம் செலுத்தி வந்துள்ளனர்.


 ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வருமான வரித் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். 


இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் வீட்டு கடன் வாங்குவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். 


அங்கு வருமான வரித்துறை ரசீதுகளை கொடுத்தபோது, பள்ளியிலிருந்து கொடுத்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 இதையடுத்து, பள்ளியில் வந்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்..


 இதனால், மற்ற ஆசிரியர்களும் வருமான வரி செலுத்துவதற்காக கொடுத்த பணத்தை வங்கியில் சென்று சரி பார்த்துள்ளனர். 


அதில், அவர்களுக்கு சந்தேகம் வந்தது. 

உடனடியாக, கடந்த 9ம் தேதி மாலையில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜனை ஆசிரியர், ஆசிரியைகள் சந்தித்தனர். 


அங்கு தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கையெப்பமிட்டு, வருமான வரிக்கு பணம் செலுத்தியதாக ஆவணத்தை காட்டியுள்ளனர். 


நகலும் வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தைக் கொண்டு வங்கிக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளனர். 


அங்கு அந்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறினர். 


இதைக் கேட்டு, ஆசிரியர், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து, ஆசிரியர்கள் கோவில்பட்டி மேற்கு போலீசில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் செய்தனர்.


 போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் விஷம் குடித்துவிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.


 இதனால், போலீசார் விசாரணை தாமதமாகி வருகிறது.


வருமான வரி செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்துள்ளனர்,


 இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போலியான வருமான வரித்துறை ஆவணத்தை கொடுத்துள்ளனர்.


 இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கூட்டாக சேர்ந்து மனு அளித்தனர்.


மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.


வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.


தூத்துக்குடி மாவட்ட கனிமொழி எம்பி முன்னிலையில் இன்று (23/09/2022) வெள்ளிக்கிழமை, தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. 




இதில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் S.U.P.S. நாகராஜா  தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி  முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்!




உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் .ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், .கருப்பசாமி, சின்னமாரிமுத்து, கோவில்பட்டி நகரச் சேர்மன் .கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!

புதன், 8 ஜூன், 2022

போதை பாக்கு - புகையிலை பொருட்கள் விற்பனை கோவில் பட்டியில் மூன்று பேர் கைது 10 கிலோ புகையிலைபறிமுதல்

தூத்துக்குடி லீக்ஸ்: 08-.06.2022

 கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது - ரூபாய் 13,000/-  மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.



இது பற்றிய செய்தியாவது:-

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாதவராஜா மற்றும் போலீசார்  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி செக்கடி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருவர்களை பிடித்து விசாரணை செய்ததில் .....

கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சின்னத்தம்பி (34), கோவில்பட்டி கே.கே நகரை சேர்ந்த கருப்பையா மகன் செல்லபெருமாள் (61) மற்றும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் தெய்வேந்திரன் (51) என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.




உடனே மேற்படி போலீசார்  சின்னத்தம்பி, செல்லபெருமாள் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 13,000/-மதிப்புள்ள 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கோவில்பட்டி தனலட்சுமி ஹோட்டலில் இரு கோஷ்டி மோதல் குழம்புவாளி மற்றும் சேர் வீசி தாக்குதல் போலீஸ் விரைந்து விசாரனை!!!

 தூத்துக்குடி மாவட்டம்: 23.09.2021

கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையம் அருகிலுள்ள தனலெட்சுமி என்ற ஹோட்டலில்   (22.09.2021) அன்றிரவு  கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கனகவேல் மகன் சிவராமன் (25), அவரது நண்பர்களான பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன் (28) மற்றும் கோவில்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மகன் பிரசாத் (29) ஆகிய மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர்.



 இவர்களுக்கு பக்கத்து மேசையில் சாப்பிட்டு கொண்டிருந்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்களான பால்ராஜ் மகன் அருண்குமார் (30) அவரது நண்பர்களான மாரிச்செல்வம் மகன் பால்ராஜ் (23),  வெயிலுமுத்து மகன் நாகராஜ் (23), முத்துராமலிங்கம் மகன் அஜித்குமார் (21) மற்றும் அந்தோணிபாண்டியன் மகன் சங்கரநாரயணன் (27) ஆகிய 5 பேரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர்.



இதில் சிவராமன் தரப்பினர் மேற்படி ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார்கள் என்பதால் அக்கடை ஊழியர்களுடன் சிரித்து  பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

இதை பார்த்த அருண்குமார் தரப்பினர் தங்களை பார்த்துதான் சிவராமன் தரப்பினர் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து மேற்படி சிவராமன் தரப்பினரை அருண்குமார் தரப்பினர் சத்தம்போட்டுள்ளனர். 

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரையொருவர் தவறாக பேசி அங்கிருந்த சேர், குழம்பு வாளியால் தாக்கி கொண்டுள்ளனர்.




இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 


அங்கு இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 

இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  ஸ்டீபன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  மாரியப்பன் தனிப்பிரிவு தலைமை காவலர் சேதுராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.